மும்பை தங்கம், வெள்ளி சந்தையில் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.240-ம், பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.480-ம் அதிகரித்துள்ளது.
சர்வதேச சந்தையில் ஒரு பேரல் கச்சா எண்ணெயின் விலை 110 அமெரிக்க டாலரையும் கடந்துள்ளதால் தங்கம், வெள்ளியின் விலையும் இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
லண்டன், ஆசிய சந்தைகளில் தங்கத்தின் விலை அவுன்ஸ் 993.50/994.50 அமெரிக்கா டாலராகவும், வெள்ளியின் விலை அவுன்ஸ் 20.50/20.55 அமெரிக்க டாலராகவும் அதிகரித்துள்ளது
மும்பை தங்கம், வெள்ளி சந்தையில் இன்றைய இறுதி நிலவரம்:
தங்கம் (24 காரட்) 10 கிராம்: ரூ.13,025 (நேற்று ரூ.12,785)
தங்கம் (22 காரட்) 10 கிராம்: ரூ.12,965 (12,725)
பார் வெள்ளி ஒரு கிலோ: ரூ.24,980 (24,500)