பங்குச் சந்தைகளில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போதே இரண்டு பங்குச் சந்தைகளிலும் குறியீட்டு எண்கள் அதிகரித்தன.
கடந்த இரண்டு நாட்களாக குறைந்த பங்கு விலைகள், நேற்று அதிகரித்தன. இன்றும் இதே போக்கு தொடர்கிறது.
காலை பங்குச் சந்தையில் வர்த்தகம் தொடங்கும் போது சென்செக்ஸ் 501 புள்ளியும் நிஃப்டி 133.50 புள்ளியும் அதிகரித்து இருந்தது.
காலை 10.15 மணி நிலவரப்படி மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 404.51 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 16,527.66 ஆக உயர்ந்தது.
இதே போல் தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 119.60 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 4985.50 ஆக உயர்ந்தது.
மும்பை பங்குச் சந்தையின் மிட் கேப் 18849, சுமால் கேப் 286.65, பி.எஸ்.இ. 500-182.29 புள்ளிகள் அதிகரித்தன.
தேசிய பங்குச் சந்தையில் எல்லா பிரிவு குறியீட்டு எண்களும் 1.65 முதல் 3.73 விழுக்காடு வரை அதிகரித்து இருந்தன.
அமெரிக்க பங்குச் சந்தையில் நேற்று டோவ் ஜோன்ஸ் 416.66, நாஸ்டாக் 86.42 எஸ் அண்ட் பி 47.28 புள்ளிகள் அதிகரித்து இருந்தது.
ஆசிய நாட்டு பங்குச் சந்தைகளில் தென் கொரியாவின் சியோல் காம்போசிட் 23.42, ஹாங்காங்கின் ஹாங்செங் 516.92, ஜப்பானின் நிக்கி 239.14,சிங்கப்பூரின் ஸ்டெய்ர்ட் டைம்ஸ் 74.96 புள்ளிகள் அதிகரித்து இருந்தது.
ஐரோப்பிய நாட்டு பங்குச் சந்தைகளிலும் குறியீட்டு எண்கள் அதிகரித்து இருந்தன.
சீனாவின் சாங்காய் காம்போசிட் மட்டும் 74.48 புள்ளிகள் குறைந்து இருந்தது.
மற்ற நாட்டு பங்குச் சந்தைகளிலும், குறிப்பாக ஆசிய, அமெரிக்க பங்கு சந்தைகளிலும் சாதகமான போக்கு இருப்பதால் இந்திய பங்குச் சந்தையில் அதிகம் பாதிப்பு இருக்காது என்று வர்த்தகர்கள் கருதுகின்றனர்.
இன்று இரண்டு பங்குச் சந்தைகளிலும் காலை 11.45 மணி முதல் நண்பகல் 12.30 வரை வர்த்தகம் நிறுத்தப்படும். மீண்டும் 12.30 மணியளவில் வர்த்தகம் தொடங்கி மாலை 4.15 வரை நடைபெறும்.