மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் இன்று காலையில் வர்த்தகம் தொடங்கும் போது அதிகரித்த குறியீட்டு எண்கள் பத்தாவது நிமிடத்திலேயே குறைய ஆரம்பித்தன, மதியம் 1.30 வரை தொடர்ந்து குறைந்து வந்த குறியீட்டு எண்கள் அதற்கு பிறகு சிறிது உயர ஆரம்பித்தது. ஆனால் மாலை வர்த்தகம் முடிவடையும் வரை பெரிய அளவில் அதிகரிக்கவில்லை. இறுதியாக குறைந்தது. நேற்றும், இன்றும் சேர்த்து மொத்தம் சென்செக்ஸ் 1,200 புள்ளிகளுக்கும் அதிகமாக குறைந்துள்ளது.
இன்று மாலை வர்த்தகம் முடிவடையும் போது, சென்செக்ஸ் நேற்றைய இறுதி நிலவரத்தைவிட 337.99 புள்ளிகள் குறைந்து குறியீட்டு எண் 16,339.89 ஆக குறைந்தது.
காலையில் வர்த்தகம் தொடங்கும் போதே சென்செக்ஸ் 350 புள்ளிகள் குறைந்து இருந்தது. ஒரு நிலையில் 944.09 புள்ளிகள் குறைந்து சென்செக்ஸ் 16,634.63 புள்ளிகளாக குறைந்தது.
சிறு முதலீட்டாளர்கள் உட்பட எல்லா தரப்பினரும் லாப கணக்கு பார்த்த காரணத்தினால் பங்குகளின் விலை அதிக அளவு குறைந்ததாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 88.75 புள்ளிகள் குறைந்து, குறியீட்டு எண் 4,864.25 ஆக குறைந்தது.
மும்பை பங்குச் சந்தையின் சுமால் கேப் 285.07, மிட் கேப் 182.62,பி.எஸ்.இ 500-154.54 புள்ளிகள் குறைந்தன.
இன்று மும்பை பங்குச் சந்தையில் ரூ5,090 கோடி மதிப்புள்ள பங்குகள் விற்பனையாயின. வெள்ளிக் கிழமை ரூ.6,721.65 கோடி மதிப்புள்ள பங்குகள் விற்பனை ஆகி இருந்தது.
இன்று மும்பை பங்குச் சந்தையில் நடந்த வர்த்தகத்தில் 497 பங்குகளின் விலை அதிகரித்தது. 2198 பங்குகளின் விலை குறைந்தது. 42 பங்குகளின் விலையில் மாற்றம் இல்லை.
தேசிய பங்குச் சந்தையில் நிப்டி ஜீனியர் 302.15 சி.என்.எக்ஸ் ஐ.டி 43.10,பாங்க் நிஃப்டி 310.85,சி.என்.எக்ஸ் 100-97.05,சி.என்.எக்ஸ் டிப்டி 74.20,சி.என்.எக்ஸ் 500-93.65, சி.என்.எக்ஸ் மிட் கேப் 149.30,சி.என்.எக்ஸ் மிட் கேப் 50 -63.85 புள்ளிகள் குறைந்தன.
வர்த்தக நேரம் மாற்றம்!
செயற்கைகோள் தொடர்பு தடைபடுவதால் நாளை முதல் 18 ந் தேதி வரை பங்குச் சந்தையின் வர்த்தக நேரம் மாற்றப்பட்டுள்ளது.
இதன்படி காலை 9.55 மணி முதல் 11.45 வரையிலும், அதன் பிறகு நண்பகல் 12.30 மணி முதல் மாலை 4.15 வரை வர்த்தகம் நடைபெறும். (நண்பகல் 11.45 முதல் 12.30 வரை வர்த்தகம் நடைபெறாது).
இன்று மும்பை பங்குச் சந்தையில் சென்செக்ஸ் பிரிவில் உள்ள பங்குகளில் 11 பங்குகளின் விலை அதிகரித்தது. 19 பங்குகளின் விலை குறைந்தது.
விலை அதிகரித்த பங்குகள் :
1) அம்புஜா சிமெண்ட் ரூ.119.95 (ரூ.01.15 )
2) கிராசிம் ரூ.2799.90 (ரூ.20.95)
3) ஹெச்.டி.எப்.சி. ரூ.2636.65 (ரூ65.30)
4) ஹின்டால்கோ ரூ.199.90 (ரூ.10.00)
5) மாருதி ரூ.905.70 (ரூ.31.40)
6) மகேந்திரா அண்ட்
மகேந்திரா ரூ.705.35 (ரூ.21.10)
7) என்.டி.பி.சி. ரூ.190.20 (ரூ.01.25)
8) ரிலையன்ஸ் எனர்ஜி ரூ.1504.75 (ரூ.19.20)
9) டாடா மோட்டார்ஸ் ரூ.701.80 (ரூ.08.65)
10) டாடா ஸ்டீல் ரூ.777.75 (ரூ.07.10)
11) டி.சி.எஸ். ரூ.853.55 (ரூ.08.50)
விலை குறைந்த பங்கு :
1) ஏ.சி.சி. ரூ.746.00 (ரூ.40.15)
2) பஜாஜ் ஆட்டோ ரூ.2199.85 (ரூ.55.65)
3) பார்தி ஏர்டெல் ரூ.769.00 (ரூ.21.55)
4) பி.ஹெச்.இ.எல். ரூ.2098.25 (ரூ.01.20)
5) சிப்லா ரூ.201.90 (ரூ.09.75)
6) டி.எல்.எப். ரூ.678.15 (ரூ.36.55)
7) ஹெச்.டி.எப்.சி. வங்கி ரூ.1357.30 (ரூ.33.25)
8) ஹிந்துஸ் யூனிலிவர் ரூ.229.00 (ரூ.02.80)
9) ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி ரூ.971.60 (ரூ.52.85)
10) இன்போசியஸ் ரூ.1419.90 (ரூ.52.10)
11) ஐ.டி.சி. ரூ.184.85 (ரூ.08.15)
12) எல்.அண்ட்.டி ரூ.3223.15 (ரூ.120.70)
13) ஓ.என்.ஜி.சி. ரூ.958.70 (ரூ.20.50)
14) ரான்பாக்ஸி ரூ.450.40 (ரூ.00.15)
15) ரிலையன்ஸ் கம்யூனி. ரூ.514.55 (ரூ.26.85)
16) ரிலையன்ஸ் இன்டஸ். ரூ.2241.50 (ரூ.63.25)
17) சத்யம் ரூ.406.55 (ரூ.05.40)
18) எஸ்.பி.ஐ. ரூ.1873.95 (ரூ.49.45)
19) விப்ரோ ரூ.417.20 (ரூ.02.50)