மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் இன்று காலையில் வர்த்தகம் தொடங்கும் போது அதிகரித்த குறியீட்டு எண்கள் அதிக வேறுபாடு இல்லாமல் தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்தது.
மாலை வர்த்தகம் முடிவடையும் போது, சென்செக்ஸ் நேற்றைய நிலவரத்தைவிட 155.62 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 17,806.19 புள்ளிகளாக உயர்ந்தது.
இதே போல் நிஃப்டி 69.95 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 5,270.05 ஆக உயர்ந்தது.
இன்று ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்ட்ட சலுகை, ரயில்வே துறையை நவீனமயமாக்கல், தனியார் துறை பங்கு போன்ற அறிவிப்புகள் பங்குச் சந்தை வட்டாரங்களில் வரவேற்பை பெற்றன. இன்று அந்நிய முதலீட்டு நிறுவனங்களும், பரஸ்பர நிதி நிறுவனங்களும் அதிக அளவு பங்குகளை வாங்கினார்கள்.
உலோக உற்பத்தி, இயந்திர உற்பத்தி, வங்கி, ரியல் எஸ்டேட், மின் உற்பத்தி ஆகிய துறைகளில் உள்ள பங்குகளின் விலை அதிகரித்தது.
நேற்று ரிலையன்ஸ் பவர் போனஸ் பங்குகளை அறிவித்தது. இன்று இதன் விலை 450.40 ஆக உயர்ந்தது. இது 8.05 விழுக்காடு உயர்வு.
இன்றைய வர்த்தகத்தில் மும்பை பங்குச் சந்தையில் 1,610 பங்குகளின் விலைகள் குறைந்தன. 1,064 பங்குகளின் விலைகள் அதிகரித்தன. 45 பங்குகளின் விலையில் மாற்றமில்லை.
பெட்ரோலிய நிறுவனங்களின் குறியீடு 384.38 புள்ளி, உலோக உற்பத்தி நிறுவனங்கள் பிரிவு 161.22, நுக்ர்வோர் பொருள் உற்பத்தி நிறுவனங்கள் பிரிவு 144.11, ரியல் எஸ்டேட் 108.17, பொதுத் துறை பிரிவு 99.13 புள்ளிகள் அதிகரித்தன.
மும்பை பங்குச் சந்தையில் 1,749 பங்குகளின் விலை அதிகரித்தது. 1,207 பங்குகளின் விலை குறைந்தது. 79 பங்குகளின் விலையில் எந்த மாற்றமும் இல்லை.
மும்பை பங்குச் சந்தையில் நுகர்வோர் பிரிவு பங்குகளின் குறியீட்டு எண் 324.09, உலோக உற்பத்தி பிரிவு 270, ரியல் எஸ்டேட் பிரிவு 247.18, பெட்ரோலிய நிறுவனங்கள் பிரிவு 157.38, பொதுத்துறை நிறுவனங்களின் பிரிவு 129.71, சுமால் கேப் 122.21, மின் உற்பத்தி 95.62, வங்கி பிரிவு 76.34 மிட் கேப் 96.46, பி.எஸ்.இ. 500-89.61 புள்ளிகள் அதிகரித்தன.
அதே போல் நிப்டி ஜீனியர் 159.50, சி.என்.எக்ஸ் ஐ.டி 56.25, பாங்க் நிஃப்டி 75.75, சி.என்.எக்ஸ் 100-69.85, சி.என்.எக்ஸ் டிப்டி72.65, சி.என்.எக்ஸ் 500-59.20, சி.என்.எக்ஸ் மிட் கேப் 104.30, சி.என்.எக்ஸ் மிட் கேப் 50-33.80 புள்ளிகள் அதிகரித்தன.
இன்று மும்பை பங்குச் சந்தையில் சென்செக்ஸ் பிரிவில் உள்ள 30 நிறுவனங்களில் 19 நிறுவனங்களின் பங்கு விலை அதிகரித்தது. 11 நிறுவனத்தின் பங்கு விலை குறைந்தது.