பங்குச் சந்தையில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போதே, எல்லா பிரிவு குறியீட்டு எண்களும் அதிகரித்தன.
காலை 10.45 மணி நிலவரப்படி மும்பை குறியீட்டு எண் சென்செக்ஸ் 146.17 புள்ளிகள் அதிகரித்து, குறியீட்டு எண் 17,796.74 ஆக அதிகரித்தது.
இதே போல் தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 47.30 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 5247.30 ஆக உயர்ந்தது.
மும்பை பங்குச் சந்தையின் மிட் கேப் 102.01, சுமால் கேப் 113.46, பி.எஸ்.இ.500-75.84 புள்ளிகள் அதிகரித்து இருந்தது.
தேசிய பங்குச் சந்தையில் எல்லா பிரிவு குறியீட்டு எண்களும் உயர்ந்து இருந்தன.
இன்று காலை வங்கி, பெட்ரோலிய நிறுவனங்களின் பங்கு விலை அதிகரித்தது. அதே போல் சிமென்ட், உர நிறுவனங்களின் பங்கு விலையும் அதிகரித்தது. இதனால் குறீயீட்டு எண்கள் உயர்ந்தன.
அந்நிய நாட்டு பங்குச் சந்தைகளிலும் பங்குகள் விலை அதிகரித்தது. அத்துடன் மற்ற நாடுகளில் இருந்து வந்த தகவல்களை அடுத்து, இங்கும் பங்குகள் விலை உயர்வதாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
அமெரிக்க பங்குச் சந்தையின் டோவ் ஜோன்ஸ் 189.20,நாஸ்டாக் 24.13,எஸ் அண்ட் பி500-18.69 புள்ளிகள் அதிகரித்து இருந்தது.
இதே போல் ஆசிய நாட்டு பங்குச் சந்தைகளில் ஹாங்காங்கின் ஹாங்செங் 296.20, ஜப்பானின் நிக்கி 32.03, சிங்கப்பூரின் ஸ்டெய்ர்ட் டைம்ஸ் 17.44 புள்ளிகள் அதிகரித்து இருந்தது.
இன்று பங்குச் சந்தையில் அதிக அளவு மாற்றம் இருக்காது என்று வர்த்தகர்கள் கருதுகின்றனர்.