Publish Date: Thu, 21 Feb 2008 (12:38 IST)
Updated Date: Thu, 21 Feb 2008 (12:38 IST)
பங்குச் சந்தைகளில் இன்று காலையில் வர்த்தகம் தொடங்கும் போதே, இரண்டு பங்குச் சந்தைகளிலும் குறியீட்டு எண்கள் அதிகரித்தன. நேற்று இருந்த நிலை மாறியது.
மும்பை பங்குச் சந்தையில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போதே சென்செக்ஸ் 252 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 17,869.68 ஆக உயர்ந்தது.
இதே போல் தேசிய பங்குச் சந்தையிலும் நிஃப்டி 79.25 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 5,233.70 ஆக உயர்ந்தது.
காலையில் அதிகரிக்க துவங்கிய குறியீட்டு எண்கள் அதிக அளவு வித்தியாசம் இல்லாமல் இருந்தன.
காலை 12 மணியளவில் சென்செக்ஸ் 149.02 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 17,766.62 ஆக உயர்ந்தது. மற்ற பிரிவு குறியீட்டு எண்களும் அதிகரித்தன.
மி்ட் கேப் 102.95,சுமால் கேப் 121.74, பி.எஸ்.இ.-500 76.59 புள்ளிகள் அதிகரித்தன.
தேசிய பங்குச் சந்தையில் வங்கி பிரிவு தவிர மற்ற எல்லா பிரிவு குறியீட்டு எண்களும் அதிகரித்து இருந்தன.
அமெரிக்க பங்குச் சந்தையின் டோவ் ஜோன்ஸ் 90.04, நாஸ்டாக் 20.90 எஸ் அண்ட் பி 11.25 புள்ளிகள் அதிகரித்தன.
சீனாவின் சாங்காய் காம்போசிட் 62.32 புள்ளிகள் குறைந்தன.
ஆனால் ஹாங்காங்கின் ஹாங்செங் 352.56, சிங்கப்பூரின் ஸ்டெய்ர்ட் டைம்ஸ் 41.07, தென் கொரியாவின் சியோல் காம்போசிட் 16.45 புள்ளிகள் சரிந்து அதிகரித்தன.
அமெரிக்க பங்குச் சந்தையிலும், ஆசிய நாட்டு பங்குச் சந்தைகளில் பங்குகளின் விலை அதிகரித்து.
இதனால் இந்திய பங்குச் சந்தைகளிலும் பங்குவிலைகள் அதிகரித்தன என்று வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
Webdunia
Publish Date: Thu, 21 Feb 2008 (12:38 IST)
Updated Date: Thu, 21 Feb 2008 (12:38 IST)