மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில் நேற்று இருந்து வந்த நிலை மாறியது.
இன்று காலை வர்த்தகம் தொடங்கும் போதே இரண்டு பங்குச் சந்தைகளிலும், எல்லா பிரிவு குறியீட்டு எண்களும் அதிகரித்தன.
பங்குச் சந்தையில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போது சென்செக்ஸ் 245.88 புள்ளிகள் உயர்ந்து குறியீட்டு எண் 18,293.93 ஆக அதிகரித்தது. (நேற்று 67 புள்ளிகள் குறைந்தது)
இதே போல் தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 77.55 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 5,354.45 ஆக அதிகரித்தது.
சென்செக்ஸ், நிஃப்டி பிரிவில் உள்ள ரிலையன்ஸ் இன்டஸ்டிரிஸ், இன்போசியஸ், டாடா ஸ்டீல் ஆகிய பங்குகளின் விலை அதிக அளவு உயர்ந்ததால், குறியீட்டு எண்கள் அதிகரித்தன.
காலை 11.15 மணியளவில் மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 142.76 புள்ளிகள் அதிகரித்து, குறியீட்டு எண் 18,190.81 ஆக இருந்தது. மிட் கேப் 101.51, சுமால் கேப் 134.05, பி.எஸ்.இ 500 - 70.61 புள்ளிகள் அதிகரித்து இருந்தன.
தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 53.05 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 5329.95 ஆக உயர்ந்தது.
மற்ற பிரிவு குறியீட்டு எண்களும் 1.05 விழுக்காடு முதல் 1.83 விழுக்காடு வரை அதிகரித்து இருந்தன.
மற்ற நாட்டு பங்குச் சந்தைகளை பொறுத்த அளவில் அமெரிக்க பங்குச் சந்தையின் குறியீட்டு எண்கள் குறைந்தன.
ஆனால் ஆசிய நாட்டு பங்குச் சந்தைகளின் குறியீட்டு எண்கள் அதிகரித்தன.
அமெரிக்க பங்குச் சந்தையின் டோவ் ஜோன்ஸ் 28.77, நாஸ்டாக் 10.74 புள்ளிகள் குறைந்தன. எஸ் அண்ட் பி 1.13 புள்ளிகள் அதிகரித்தன.
ஆசிய நாட்டு பங்குச் சந்தைகளில் சீனாவின் சாங்காய் காம்போசிட் 105.36, ஜப்பானின் நிக்கி 183.14,சிங்கப்பூரின் ஸ்டெய்ர்ட் டைம்ஸ் 37.40, தென் கொரியாவின் சியோல் காம்போசிட் 24.28 புள்ளிகள் அதிகரித்தன.
அந்நிய முதலீட்டு நிறுவனங்களும், உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்களும் பங்குகளை வாங்குவதில் ஆர்வம் காண்பிப்பதால் பங்குச் சந்தையில் தொடர்ந்து முன்னேற்றம் காணப்படுவதாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.