நமது பங்குச் சந்தைகளில் கடந்த 10 முதல் 15 நாட்களாக பங்குகளின் விலைகள் நிலை இல்லாமல் இருந்து வருகிறது. இந்த நிலை மாறி பங்குச் சந்தையில் ஸ்திரத்தன்மை வேண்டும். அதுதான் முதலீட்டாளர்களுக்கும், வர்த்தகர்களுக்கும் நல்லது.
இரண்டு மூன்று நாட்களாவது, நிலையாக இருந்தால்தான் வர்த்தகர்கள் நம்பிக்கை அடைவார்கள். நேற்று நிஃப்டியின் போக்கை பார்த்தால் நிஃப்டி அதிகரித்து உள்ளது. இந்த நிலை இன்றும் தொடரும். காலையில் நிஃப்டி அதிகரிக்கும். காலையில் வர்த்தகம் தொடங்கும் போது 30 முதல் 40 புள்ளி வித்தியாசத்தை காணலாம். இது 4970 முதல் 4980 வரை அதிகரிக்கும்.
நிஃப்டி 4955/4995/5015 என்ற அளவுகளில் அதிகரிக்கும். 5015 என்ற அளவுக்கு அதிகரித்தால், பங்குகளை அதிக அளவு வாங்குவார்கள். இதனால் நிஃப்டி மேலும் அதிகரித்து 5040/5075/5100 புள்ளிகளாக குறைந்த நேரத்திற்கு உயரும்.
இதற்கு மாறாக நிஃப்டி 4900/4855/4800 என்று குறைந்து, 4800 விட குறைந்தால், அதிக அளவு பங்குகளை விற்பனை செய்வதை பார்க்கலாம். இதனால் நிஃப்டி மேலும் சரிந்து 4765/4730 என்ற அளவிற்கு குறையும்.
இன்று நிஃப்டி 4920 என்ற அளவிலேயே இருந்தால், நாகக்ஜூனா பெர்டிலைசர்ஸ், ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி,எஸ்ஸார் ஆயில், யூனிடெக், பாங்க் ஆப் பரோடா, ரிலையன்ஸ் இன்டஸ்டிரிஸ், பவர் கிரிட், ஆர்சிட் கெமிக்கல்ஸ், ஹிந்த் ஆயில் எக்ஸ்போ, கேரின் இந்தியா ஆகிய நிறுவனங்களின் பங்குகளில் அதிக அளவு வர்த்தகம் நடக்கும்.
நேற்றைய சந்தை...
பங்குச் சந்தையில் வர்த்தகம் தொடங்கும் போதே, குறியீட்டு எண்கள் அதிகரித்தன. மற்ற நாடுகளில் இருந்து வந்த தகவல்களால், கடைசி வரை பங்குச் சந்தை அதிகரித்தது. இறுதியில் குறியீட்டு எண்கள் உயர்ந்தன. இதற்கு முன்பு விலை குறைந்த பங்குகளான ரியல் எஸ்டேட், மின் உற்பத்தி, உலோக உற்பத்தி நிறுவனங்களின் பங்குகளி்ன் விலை உயர்ந்தது. அத்துடன் நுகர்வோர் பொருட்கள் மற்றும் வங்கி பங்குகளின் விலையும் அதிகரித்தது. சர்க்கரை ஆலைகளின் பங்குகள் அதிக அளவு விற்பனை செய்வதை பார்க்க முடிந்தது.
ஒட்டு மொத்தமாக நேற்றைய பங்குச் சந்தையின் போக்கை கணித்தால் எதிர்மறையாகவே இருக்கிறது. காலையில் பங்குகளின் விலை அதிகரித்தாலும், மதியத்திற்கு மேல் மிட்கேப், சுமால் கேப் பிரிவில் உள்ள பங்குகளி்ன் விலை குறைந்தது. முன்பேர சந்தையில் நிஃப்டியின் அளவு, அன்றாட சந்தையின் அளவாகவே இருந்தது. கடைசி அரைமணி நேரத்தில் விலை உயர்வு, குறுகிய கால இலாபத்திற்காகவே.
நேற்று முன்பேர சந்தையில் ஆர்.என்.ஆர்.எல், ரிலையன்ஸ், ரிலையன்ஸ் கேப்பிடல், யூனிடெக், ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி, ரிலையன்ஸ் எனர்ஜி, ரிலையன்ஸ் பவர், கோடக் வங்கி, எஸ்ஸார் ஆயில், ஆர்சிட் கெமிக்கல்ஸ், சத்யம் ஆகிய பங்குகளில் ஆர்வம் காட்டினார்கள்.
சென்செக்ஸ் 415 புள்ளி உயர்வுடன் குறியீட்டு எண் 17023 ஆகவும், நிஃப்டி 91.20 புள்ளி அதிகரித்து குறியீட்டு எண் 4929 ஆக முடிந்தது.