மும்பை தங்கம், வெள்ளி சந்தையில் இன்று தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.225-ம், பார் வெள்ளியின் விலை ரூ.215-ம் குறைந்துள்ளது.
இந்தியாவைச் சேர்ந்த முக்கிய வாடிக்கையாளர்களின் குறைவான வாங்கும் ஆர்வத்தால், நியுயார்க் சந்தையில் அவுன்சுக்கு 907.70/908.50 அமெரிக்க டாலராக இருந்த தங்கத்தின் விலை 906/906.70 டாலராக குறைந்துள்ளது. ஆனால், பார் வெள்ளியின் விலை அவுன்சுக்கு 17.13/17.18 டாலரில் இருந்து 17.16/17.21 டாலராக அதிகரித்துள்ளது.
மும்பை சந்தையில் இன்று காலை விலை நிலவரம்:
24 காரட் தங்கம் 10 கிராம் ரூ. 11,660
22 காரட் தங்கம் 10 கிராம் ரூ.11,610
பார் வெள்ளி 1 கிலோ ரூ.21,555