Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இன்று பங்குச் சந்தை சரியுமா?

- - ராஜேஷ் பல்வியா

இன்று பங்குச் சந்தை சரியுமா?
, வெள்ளி, 8 பிப்ரவரி 2008 (10:24 IST)
பங்குச் சந்தைகளில் நேற்றைய நிலையே இன்றும் தொடரும். நான் ஏற்கனவே நமது பங்குச் சந்தைகளில், அந்நிய நாட்டு பங்குச் சந்தைகளின் தாக்கம் இருக்கும் என்று கூறியது நினைவிருக்கலாம். இதையே நேற்று காலையில் பங்குச் சந்தைகளில் வர்த்தகம் தொடங்கிய நிலையும், இறுதியில் முடிந்த நிலையும் எடுத்துக் காட்டுவதாக உள்ளன.

இன்றும் பங்குச் சந்தைகளில் காலையில் குறியீட்டு எண்கள் குறைந்த நிலையிலேயே தொடங்கும். நிஃப்டி 30-40 புள்ளிகள் குறைவாக ஆரம்பிக்கும். பிறகு 5,070ல் நிலை கொள்ளும். இந்த நிலை நீடித்தாலே மகிழ்ச்சி அடையலாம்.

நிஃப்டி அதிகரித்து 5195/5250/5315 என்ற அளவை எட்டினால், பிறகு உயர்ந்து குறைந்த நேரத்திற்கு 5370 முதல் 5400 வரை இருக்கும்.

இதற்கு மாறாக நிஃப்டி 5070 புள்ளிகளுக்கும் குறைந்தால், மேலும் சரிந்து 5000/4900 என்று குறைந்த நேரத்திற்கு குறையும். 4,900 பு‌ள்‌ளிக‌ள் குறைந்தால் 4730 வரை சரியும்.

இன்று மார்க்கெட் வட்டாரங்களில் ரிலையன்ஸ் இன்டஸ்டிரிஸ்,நெய்வேலி லிக்னெட்,நாகர்ஜீனா பெர்டிலைசர்ஸ்,கிளாஸ்கோ,டிஷ் டி.வி,பூன்ஞ் லாயிட்,பயோகான்,ஐ.வி.ஆரி.சி இன்ப்ரா ஆகிய நிறுவனங்களின் அதிக கவனம் இருக்கும்.

நேற்றைய நிலை

நேற்று மதியம் வரை பங்குச் சந்தையில் அதிக இழப்பு இல்லாமல் இருந்தது. மதியத்திற்கு பிறகு எல்லா தொழில் பிரிவில் உள்ள பங்குகள் அதிக அளவு விற்பனை செய்தனர். குறிப்பாக பெட்ரோலிய நிறுவனங்கள்,உலோக உற்பத்தி,ரியல் எஸ்டேட்,தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களின் பங்குகளை அதிக அளவு விற்பனை செய்தனர்.

இவற்றின் குறியீட்டு எண்கள் குறைந்ததால் ஒட்டு மொத்த குறியீட்டு எண்களும் வேகமாக சரிந்தன. மிட் கேப், சுமால் கேப் பிரிவில் உள்ள பங்குகளின் விலை காலையில் அதிகரித்தது. ஆனால் இந்த நிலை தொடரவில்லை. இவையும் மதியத்திற்கு பிறகு சரிந்தன.

சென்செக்ஸ் 612.50 புள்ளிகள் குறைந்து குறியீட்டு எண் 17526.90 ஆக குறைந்தது. இதே போல் நிஃப்டி 189.30 புள்ளிகள் குறைந்து குறியீட்டு எண் 5133.25 ஆக சரிந்தது.

இந்த நிதி ஆண்டின் பொருளாதார வளர்ச்சி சிறப்பாக இருக்கும், பணப் புழக்கம் தாராளமாக இருக்கின்றது போன்ற காரணங்கள் பங்குச் சந்தைகளி்‌ல் எவ்வித பிரதிபலிப்பையும் ஏற்படுத்தவில்லை.

ரிலையன்ஸ் பவர் பங்குகளுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு திருப்பி கொடுக்கும் பணத்தை பங்குச் சந்தைகளில் முதலீடு செய்யும் போக்கு இருந்தது.

மதியத்தில் அதிக அளவு பங்குகளை விற்பனை செய்ய துவங்கினர். எல்லா பிரிவு பங்குகளையும் விற்பனை செய்வது கண்கூடாக தெரிந்தது. குறிப்பாக ரிலையன்ஸ் குழும நிறுவனங்களான ஆர்.என்.ஆர்.எல்,ரிலையன்ஸ் எனர்ஜி,ரிலையன்ஸ் இன்டஸ்டிரிஸ்,ரிலையன்ஸ் கேப்பிடல் அத்துடன் ஜே.பி.ஹைட்ரோ,நெய்வேலி லிக்னைட்,ஐ.டி.சி,கோடக் வங்கி,ஆக்சிஸ் வங்கி ஆகியவற்றின் பங்குகள் அதிக அளவில் விற்பனை செய்யப்பட்டன. நேற்று மொத்தம் ரூ.61,429 கோடி மதிப்புள்ள பங்குகள் விற்பனை செய்யப்பட்டன.

Share this Story:

Follow Webdunia tamil