Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பங்குச் சந்தைகளில் வீழ்ச்சி!

பங்குச் சந்தைகளில் வீழ்ச்சி!
, புதன், 6 பிப்ரவரி 2008 (13:13 IST)
தேசிய, மும்பை பங்குச் சந்தைகள் இன்று கடும் வீழ்ச்சியை சந்தித்தன.

காலையில் வர்த்தகம் தொடங்கும் போதே சென்செக்ஸ் 727.15 புள்ளிகள் சரிந்து குறியீட்டு எண் 17,936.10 ஆக குறைந்தது. இதே போல் தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 226.85 புள்ளிகள் சரிந்து குறியீட்டு எண் 5,257.05 ஆக சரிந்தது.

குறியீட்டு எண்களின் வீழ்ச்சிக்கு காரணம் ரிலையன்ஸ் இன்டஸ்டிரிஸ், இன்போசியஸ், டாடா ஸ்டீல் ஆகிய நிறுவனங்களின் பங்குகளின் விலை சரிந்ததே என்று புரோக்கர்கள் தெரிவித்தனர். அத்துடன் மற்ற நாடுகளில் பங்கு சந்தைகளும் சரிவை சந்தித்ததால் முதலீட்டு நிறுவனங்கள் உட்பட எல்லா வகை முதலீட்டாளர்களும் அதிக அளவு பங்குகளை விற்பனை செய்தனர். இதனால் விலைகள் குறைந்து குறியீட்டு எண்கள் சரிந்தது.

இன்று இந்தியாவின் பங்குச் சந்தை மட்டுமல்லாது, மற்ற நாடுகளின் பங்குச் சந்தைகளும் சரிவை சந்தித்தன.
அமெரிக்க பங்குச் சந்தையின் டோவ் ஜோன்ஸ் 370.03, நாஸ்டாக் 73.28, எஸ் அண்ட் பி 500-44.18 புள்ளிகள் குறைந்தது.

ஆசிய நாட்டு பங்குச் சந்தைகளில் சீனாவின் சாங்காய் 67.35, ஹாங்காங்கின் ஹாங்சங் 1,339.24, ஜப்பானின் நிக்கி 615.48, சிங்கப்பூரின் ஸ்டெய்ர்ட் டைம்ஸ் 106.42 புள்ளிகள் குறைந்தன. ஆறுதல் அளிக்கும் வகையில் தென் கொரியாவின் சியோல் காம்போசிட் மட்டும் 6.44 புள்ளிகள் அதிகரித்து.

ஐரோப்பிய நாடுகளின் எல்லா பங்குச் சந்தைகளும் சரிவை சந்தித்தன. மும்பை பங்குச் சந்தையில் காலை 11.30 மணி நிலவரப்படி சென்செக்ஸ் 535.89 புள்ளிகள் சரிந்து குறியீட்டு எண் 18,127.27 ஆக இருந்தது. இதே போல் மிட் கேப் 116.61, சுமால் கேப் 83.34, பி.எஸ்.இ. 500-185.75 புள்ளிகள் குறைந்தன.
தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 134.55 புள்ளிகள் குறைந்து குறியீட்டு எண் 5,318.60 ஆக குறைந்தது.

வங்கி, தகவல் தொழில் நுட்பம், மின் உற்பத்தி,நுகர்வோர் பொருட்கள், ரியல் எஸ்டேட், உலோக உற்பத்தி, பொதுத்துறை நிறுவனங்கள் வாகன உற்பத்தி ஆகிய துறைகளில் உள்ள நிறுவனங்களின் பங்கு விலை சரிவை சந்தித்தது.

Share this Story:

Follow Webdunia tamil