தேசிய பங்குச் சந்தையில் மதியத்திற்கு பிறகு பங்குகளின் விலை அதிக ஏற்ற இறக்கத்துடன் இருந்தாலும் இறுதியில் நிஃப்டி 20.40 புள்ளிகள் மட்டுமே அதிகரித்தது.
பங்குச் சந்தைகளில் பங்குகளின் விலைகள் அதிக ஏற்ற இறக்கமாக இருந்தது. மதியம் உணவு இடைவேளை வரை குறைந்து வந்த குறியீட்டு எண்கள், அதன் பிறகு உயர துவங்கியது.
காலையில் பங்குச் சந்தைகளில் வர்த்தகம் குறியீட்டு எண்கள் சரிந்தன. மற்ற நாட்டு பங்குச் சந்தைகளில் காணப்பட்ட மந்தப் போக்கால், இங்கும் பங்கு விலைகள் குறைந்தன.
அமெரிக்க பங்குச் சந்தையின் வீழ்ச்சியினால் மற்ற ஆசிய நாட்டு சந்தைகளின் குறியீட்டு எண்களும் குறைந்தன.மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 18,663.16 ஆக முடிந்தது. இது நேற்றைய இறுதி நிலவரத்தை விட 2.84 புள்ளிகள் அதிகம்.
அதே நேரத்தில் மிட் கேப் 66.36, சுமால் கேப் 105, பி.எஸ்.இ 500- 32.67 புள்ளிகள் அதிகரித்தன. தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 20.40 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 5483.90 ஆக முடிந்தது.
இதேபோல் நிஃப்டி ஜீனியர் 52.55, சி.என்.எக்ஸ் ஐ.டி 64.80, பாங்க் நிஃப்டி 163.70, சி.என்.எக்ஸ் 100-20.90, சி.என்.எக்ஸ் டிப்டி 12.45, சி.என்.எக்ஸ். 500- 28.90, சி.என்.எக்ஸ். மிட் கேப் 57.55, மிட்கேப் 50-48.15 புள்ளிகள் அதிகரித்தன.