இந்திய பங்குச் சந்தை வட்டாரங்கள் எதிர்பார்ததது போலவே அமெரிக்க ரிசர்வ் வங்கி வட்டியை அரை விழுக்காடு குறைத்து விட்டது. கடந்த ஒரு வாரமாக அந்நிய முதலீட்டு நிறுவனங்கள், இந்திய பங்குச் சந்தையில் பங்குகளை விற்பனை செய்து வந்தன. இன்று இங்கு முதலீடு செய்ய ஆர்வம் காண்பிக்கலாம். இதனால் இன்று பங்கச் சந்தைகளில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு உண்டு.
மதியத்திற்கு மேல் பங்குகளின் விலை அதிகரிக்க வாய்ப்பு உண்டு.
மும்பை பங்குச் சந்தையில் இன்று வர்த்தகம் தொடங்கிய போது, குறியீடு எண் சென்செக்ஸ் உயர்ந்து இருந்தது. ஆனால் 5 நிமிடங்களில் சரிய துவங்கியது. இது தான் தேசிய பங்குச் சந்தையின் நிலையும்.
மும்பை பங்குச் சந்தையில் காலையில் இருந்து குறைந்து வந்த குறியீட்டு எண் 10.40 மணியளவில் சிறிது சிறிதாக முன்னேற துவங்கியது. 11 மணியளவில் நேற்றைய இறுதி நிலவரத்தை விட, சென்செக்ஸ் 180.76 புள்ளிகள் குறைந்து இருந்தது.
இதே போல் மிட் கேப் 160.07, சுமால் கேப் 208.54, பி.எஸ்.இ-500 106.94 புள்ளிகள் குறைந்து இருந்தன.
தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 48.60 புள்ளிகள் குறைந்து குறியீட்டு எண் 5,119.00 ஆக இருந்தது. இதே போல் மற்ற பிரிவு குறியீட்டு எண்களும் குறைந்து இருந்தன.
மற்ற நாட்டு பங்குச் சந்தைகளை பொறுத்த அளவில், அமெரிக்க பங்குச் சந்தைகளில் குறியீட்டு எண்கள் குறைந்து இருந்தன. டோவ் ஜோன்ஸ் ஆவ்ரேஜ் 37.47, நாஸ்டாக் 9.06, எஸ் அண்ட் பி500- 6.49 புள்ளிகள் குறைந்து இருந்தது.
ஆனால் ஆசிய நாட்டு பங்குச் சந்தைகளில் இரு வேறுபட்ட நிலை இருந்தது. சீனாவின் சாங்காய் காம்போசிட் 87.24, ஹாங்காங்கின் ஹாங்சாங் 169.69 புள்ளிகள் குறைந்து இருந்தது.
சிங்கப்பூரின் ஸ்டெய்ர்ட் டைம்ஸ் 6.49, தென்கொரியாவின் சியோல் காம்போசிட் 39.21 புள்ளிகள் அதிகரித்து இருந்தது.
அந்நிய முதலீட்டு நிறுவனங்கள், உள்நாட்டு முதலீட்டு, நிதி நிறுவனங்கள், வர்த்தகர்கள் முன்பேர சந்தையில் மாதத்தின் இறுதி நாளான இன்று டெரிவேவடிவ்ஸ் கணக்கு முடிக்கின்றன. இதனால் இன்று பங்குவிலைகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் மாலை வர்த்தகம் முடிவடையும் போது பங்குகளின் விலை அதிகரித்து குறியீட்டு எண்கள் அதிகரிக்க வாய்ப்பு உண்டு.