பங்குச் சந்தையில் இன்று காலையில் வர்த்தகம் தொடங்கியதில் இருந்தே குறைந்து வந்த குறியீட்டு எண்கள், கடைசி வரை உயரவே இல்லை.
ஆசிய நாடுகளில் பங்குச் சந்தைகளில் ஏற்பட்ட சரிவு, மற்றும் நிதிச் சந்தையில் பெரிய அளவு எந்த நடவடிக்கையும் இல்லாத காரணத்தினால், பங்கு விலைகள் குறைந்தன.
அத்துடன் டிரைவ்டிவ்ஸ் எனப்படும் முன்பேர வர்த்தகத்தில் இந்த மாத கணக்குகள் முடிக்கப்பட வேண்டும். அடுத்து பிப்ரவரி முதல் தேதியில் இருந்து புதிய கணக்கு ஒப்பந்தங்கள் செய்ய வேண்டும்.
ரிசர்வ் வங்கி நேற்று அறிவித்த பொருளாதார கொள்கையால், புதிய இதன் காரணமாக டிரைவ்டிவ்ஸ் ஒப்பந்தங்கள் செய்து கொள்வதில் முதலீட்டாளர்கள் ஆர்வம் காண்பிக்கவில்லை.இதுவும் பங்குச் சந்தையின் சரிவுக்கு மற்றொரு காரணம் என்று வர்த்தகர்கள் கருதுகின்றனர்.
காலையில் இருந்து குறைந்து வந்த சென்செக்ஸ் இறுதியி்ல் 333.30 புள்ளிகள் குறைந்து குறியீட்டு எண் 17,758.64 ஆக முடிந்தது.
மத்திய அரசு பெட்ரோலிய துறையில் அந்நிய நேரடி முதலீட்டை அதிகரிப்பது என்ற முடிவு எடுத்ததால், கடைசி நேரத்தில் பெட்ரோலிய நிறுவனங்களின் பங்கு விலைகள் அதிக அளவு குறைந்தன. குறிப்பாக ரிலையன்ஸ் இன்டஸ்டிரிஸ் நிறுவன பங்கு விலை 4.12 விழுக்காடும், ரிலையன்ஸ் எனர்ஜி பங்கு விலை 5.44 விழுக்காடும் குறைந்தன. இதே போல் ஓ.என்.ஜி.சி நிறுவனத்தின் பங்கு விலை 4.94 விழுக்காடு குறைந்தது.
மிட் கேப் 192.18, சுமால் கேப் 230.81, பி.எஸ்.இ-500 163.49 புள்ளிகள் குறைந்தன.
தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 113.20 புள்ளிகள் சரிந்து குறியீட்டு எண் 5,167.60 ஆக குறைந்தது. அந்நிய முதலீட்டை கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுக்கும் என்ற அறிவிப்பு, அமெரிக்க ரிசரிவ் வங்கி மேலும் அரை விழுக்காடு வட்டி குறைக்கும் என்பதால் அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் பங்குகளை வாங்குவது மந்தமாக இருந்தது. இதனால் பங்குகளின் விலைகள் குறைந்து.
தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி ஜீனியர் 327.70, சி.என்.எக்ஸ் ஐ.டி 18.25, பாங்க் நிஃப்டி 165.45 சி.என்.எக்ஸ் 100- 118.80, சி.என்.எக்ஸ் டிப்டி 100.15, சி.என்.எக்ஸ் 500- 105.65, மிட் கேப் 183.70, மிடேகேப் 50- 103.15 புள்ளிகள் குறைந்தன
பங்குகளின் இறுதி விலை நிலவரம் :
மும்பை சென்செக்ஸ் பிரிவில் வர்த்தகம் முடிந்த போது விலை அதிகரித்த பங்குகளின் விபரம் :
ஏ.சி.சி. பங்கு விலை ரூ.5.70 அதிகரித்து பங்கின் விலை ரூ.797.35 ஆக உயர்ந்தது.
அம்புஜா சிமெண்ட் பங்கு விலை ரூ0.90 அதிகரித்து பங்கின் விலை ரூ.118.30 ஆக உயர்ந்தது.
பார்தி ஏர்டெல் பங்கு விலை ரூ.1.90 அதிகரித்து பங்கின் விலை ரூ.852.30 ஆக உயர்ந்தது.
பி.ஹெச்.இ.எல் பங்கு விலை ரூ.37.30 அதிகரித்து பங்கின் விலை ரூ.2089.25 ஆக அதிகரித்தது.
ஹெச்.டி.எப்.சி பங்கு விலை ரூ.43.55 அதிகரித்து பங்கின் விலை ரூ.2894.05 ஆக உயர்ந்தது.
ஹெச்.டி.எப்.சி வங்கி பங்கு விலை ரூ.0.05 அதிகரித்து பங்கின் விலை ரூ.1531.80 ஆக உயர்ந்தது.
ரான்பாக்ஸி பங்கு விலையில் மாற்றம் இல்லை நேற்றைய விலையான ரூ.355.30 ஆக உள்ளது.
டாடா ஸ்டீல் பங்கு விலை ரூ.7.30 அதிகரித்து பங்கின் விலை ரூ.723.50 ஆக அதிகரித்தது.
டி.சி.எஸ். பங்கு விலை ரூ.2.40 அதிகரித்து பங்கின் விலை ரூ.865.65 ஆக உயர்ந்தது.
விலை குறைந்த பங்குகளின் விபரம் :
பஜாஜ் ஆட்டோ பங்கு விலை ரூ.109.85 குறைந்து பங்கின் விலை ரூ.2268.80 ஆக குறைந்தது.
சிப்லா பங்கு விலை ரூ.2.00 குறைந்து பங்கின் விலை ரூ.188.75 ஆக குறைந்தது.
டி.எல்.எப் பங்கு விலை ரூ.21.00 குறைந்து பங்கின் விலை ரூ.862.20 ஆக குறைந்தது.
கிரேசம் பங்கு விலை ரூ.11.65 குறைந்து பங்கின் விலை ரூ.2991.25 ஆக குறைந்தது.
ஹின்டால்கோ பங்கு விலை ரூ.3.65 குறைந்து பங்கின் விலை ரூ.176.10 ஆக குறைந்தது.
ஹிந்துஸ்தான் யூனிலிவர் பங்கு விலை ரூ.10.65 குறைந்து பங்கின் விலை ரூ.196.60 ஆக குறைந்தது.
ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி பங்கு விலை ரூ.35.45 குறைந்து பங்கின் விலை ரூ.1184.85 ஆக குறைந்தது.
இன்போசியஸ் பங்கு விலை ரூ.0.10 குறைந்து பங்கின் விலை ரூ.1492.75 ஆக குறைந்தது.
ஐ.டி.சி பங்கு விலை ரூ.1.60 குறைந்து பங்கின் விலை ரூ.199.50 ஆக குறைந்தது.
எல்.அண்ட்.டி பங்கு விலை ரூ.63.20 குறைந்து பங்கின் விலை ரூ.3706.80 ஆக குறைந்தது.
மாருதி பங்கு விலை ரூ.14.60 குறைந்து பங்கின் விலை ரூ.842.60 ஆக குறைந்தது.
மகேந்திரா அண்ட் மகேந்திரா பங்கு விலை ரூ.10.60 குறைந்து பங்கின் விலை ரூ.691.05 ஆக குறைந்தது.
என்.டி.பி.சி பங்கு விலை ரூ.9.95 குறைந்து பங்கின் விலை ரூ.201.70 ஆக குறைந்தது.
ஓ.என்.ஜி.சி பங்கு விலை ரூ.50.30 குறைந்து பங்கின் விலை ரூ.968.50 ஆக குறைந்தது.
ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் பங்கு விலை ரூ.30.50 குறைந்து பங்கின் விலை ரூ.612.35 ஆக குறைந்தது.
ரிலையன்ஸ் எனர்ஜி பங்கு விலை ரூ.114.60 குறைந்து பங்கின் விலை ரூ.1992.30 ஆக குறைந்தது.
ரிலையன்ஸ் இன்டஸ்டிரிஸ் பங்கு விலை ரூ.106.05 குறைந்து பங்கின் விலை ரூ.2469.60 ஆக குறைந்தது.
சத்யம் பங்கு விலை ரூ.2.15 குறைந்து பங்கின் விலை ரூ.394.70 ஆக குறைந்தது.
எஸ்.பி.ஐ. பங்கு விலை ரூ.4.45 குறைந்து பங்கின் விலை ரூ.2220.65 ஆக குறைந்தது.
டாடா மோட்டார்ஸ் பங்கு விலை ரூ.19.60 குறைந்து பங்கின் விலை ரூ.696.15 ஆக குறைந்தது. .
விப்ரோ பங்கு விலை ரூ.0.60 குறைந்து பங்கின் விலை ரூ.412.10 ஆக குறைந்தது.