மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 208.88 புள்ளிகளும், தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 109.25 புள்ளிகளும் குறைந்தன.
பங்குச் சந்தையில் இன்று எல்லா பிரிவில் உள்ள பங்குகளையும் வாங்குவதும், விற்பதுமாக இருந்தனர். அத்துடன் அந்நிய நாடுகளில் இருந்து வந்த தகவல்களை அடுத்து பங்குச் சந்தைகளில் காலையிலேயே பங்கு விலைகள் கடுமையாக குறைந்தது. மதியம் 1 மணிக்கு பிறகு நிலைமை சிரானது. வங்கி, வாகன உற்பத்தியில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள், ரிலையன்ஸ் இன்டஸ்டிரிஸ், எல் அண்ட் டி ஆகியவற்றின் பங்குகள் அதிக அளவு விற்பனையானதாக புரோக்கர்கள் தெரிவித்தனர்.
காலையில் வர்த்தகம் தொடங்கும் போதே சென்செக்ஸ் குறைந்து இருந்தது. ஒரு நிலையில் 900 புள்ளிகள் சரிந்து குறியீட்டு எண் 17,443.29 ஆக குறைந்தது. பிறகு சிறிது சிறிதாக சென்செக்ஸ் அதிகரித்தது.
இதே போல் தேசிய பங்கு சந்தையின் நிஃப்டி 109.25 புள்ளிகள் குறைந்தது. ஒரு நிலையில் நிஃப்டி 300 புள்ளிகள் குறைந்து குறியீட்டு எண் 5,071 ஆக குறைந்தது.
மும்பை பங்குச் சந்தையில் வங்கி, வாகன உற்பத்தி நிறுவனங்களின் பங்குகளின் விலை காலையில் குறைந்தது. ஆனால் மதியத்திற்கு பின் நிலைமை மாறியதால், இதன் விலைகள் பழைய நிலைக்கே திரும்பின.
மும்பை பங்குச் சந்தையில் 1,851 பங்குகளின் விலை குறைந்தது. 865 பங்குகளின் விலை அதிகரித்தது. 31 பங்குகளின் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை.
மும்பை பங்கு்ச சந்தையின் மிட் கேப் 34.44, சுமால் கேப் 117.39, பி.எஸ்.இ-500 65.85 புள்ளிகள் குறைந்தன.
தேசிய பங்குச் சந்தையில் பாங்க் நிஃப்டி 149.65 புள்ளிகளும், மிட் கேப் 44.05 புள்ளிகள் அதிகரித்தன.
மற்ற பிரிவு குறியீட்டூ எண்கள் குறைந்தன.
பங்குகளின் இறுதி விலை நிலவரம் :
மும்பை சென்செக்ஸ் பிரிவில் உள்ள பங்குகளில் வர்த்தகம் முடிந்த போது பங்குகள் விலை உயர்வு விபரம்.
ஏ.சி.சி. பங்கு விலை ரூ.10.95 அதிகரித்து பங்கின் விலை ரூ.798.65 ஆக உயர்ந்தது.
அம்புஜா சிமெண்ட் பங்கு விலை ரூ2.05 குறைந்து பங்கின் விலை ரூ.115.05 ஆக குறைந்தது.
பஜாஜ் ஆட்டோ பங்கு விலை ரூ.195.20 அதிகரித்து பங்கின் விலை ரூ.2459.35 ஆக அதிகரித்தது.
பார்தி ஏர்டெல் பங்கு விலை ரூ.44.90 குறைந்து பங்கின் விலை ரூ.869.70 ஆக குறைந்தது.
பி.ஹெச்.இ.எல் பங்கு விலை ரூ.72.70 குறைந்து பங்கின் விலை ரூ.2092.30 ஆக குறைந்தது.
சிப்லா பங்கு விலை ரூ.1.30 அதிகரித்து பங்கின் விலை ரூ.184.60 ஆக உயர்ந்தது.
டி.எல்.எப் பங்கு விலை ரூ.52.60 குறைந்து பங்கின் விலை ரூ.892.50 ஆக குறைந்தது.
கிரேசம் பங்கு விலை ரூ.63.45 குறைந்து பங்கின் விலை ரூ.2970 ஆக குறைந்தது.
ஹெச்.டி.எப்.சி பங்கு விலை ரூ.68.40 அதிகரித்து பங்கின் விலை ரூ.2781.75 ஆக உயர்ந்தது.
ஹெச்.டி.எப்.சி வங்கி பங்கு விலை ரூ.16.40 குறைந்து பங்கின் விலை ரூ.1585. ஆக குறைந்தது.
ஹின்டால்கோ பங்கு விலை ரூ.0.45 அதிகரித்து பங்கின் விலை ரூ.173.80 ஆக அதிகரித்தது.
ஹிந்துஸ்தான் யூனிலிவர் பங்கு விலை ரூ.0.05 பைடா அதிகரித்து பங்கின் விலை ரூ.199.35 ஆக உயர்ந்தது.
ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி பங்கு விலை ரூ.14.45 அதிகரித்து பங்கின் விலை ரூ.1273.70 ஆக உயர்நதது.
இன்போசியஸ் பங்கு விலை ரூ.74.50 குறைந்து பங்கின் விலை ரூ.1446.50 ஆக குறைந்தது.
ஐ.டி.சி பங்கு விலை ரூ.1.85 குறைந்து பங்கின் விலை ரூ.196.35 ஆக குறைந்தது.
எல்.அண்ட்.டி பங்கு விலை ரூ.45.90 குறைந்து பங்கின் விலை ரூ.3844.50 ஆக குறைந்தது.
மாருதி பங்கு விலை ரூ.32.95 அதிகரித்து பங்கின் விலை ரூ.862.60 ஆக அதிகரித்தது
மகேந்திரா அண்ட் மகேந்திரா பங்கு விலை ரூ.12.05 அதிகரித்து பங்கின் விலை ரூ.686.25 ஆக உயர்ந்தது.
என்.டி.பி.சி பங்கு விலை ரூ.9.40 குறைந்து பங்கின் விலை ரூ.212.85 ஆக குறைந்தது.
ஓ.என்.ஜி.சி பங்கு விலை ரூ.14.65 குறைந்து பங்கின் விலை ரூ.1000.80 ஆக குறைந்தது.
ரான்பாக்ஸி பங்கு விலை ரூ.17.55 குறைந்து பங்கின் விலை ரூ.350.40 ஆக குறைந்தது.
ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் பங்கு விலை ரூ.22.15 குறைந்து பங்கின் விலை ரூ.646.25 ஆக குறைந்தது.
ரிலையன்ஸ் எனர்ஜி பங்கு விலை ரூ.67.45 அதிகரித்து பங்கின் விலை ரூ.2097.70 ஆக உயர்ந்தது.
ரிலையன்ஸ் இன்டஸ்டிரிஸ் பங்கு விலை ரூ.45.55 குறைந்து பங்கின் விலை ரூ.2564.00 ஆக குறைந்தது.
சத்யம் பங்கு விலை ரூ.7.80 குறைந்து பங்கின் விலை ரூ.398.50 ஆக குறைந்தது.
எஸ்.பி.ஐ. பங்கு விலை ரூ.97.30 குறைந்து பங்கின் விலை ரூ.2307.70 ஆக குறைந்தது.
டாடா மோட்டார்ஸ் பங்கு விலை ரூ.2.35 அதிகரித்து பங்கின் விலை ரூ.714.70 ஆக உயர்ந்தது.
டாடா ஸ்டீல் பங்கு விலை ரூ.15.70 குறைந்து பங்கின் விலை ரூ.698.20 ஆக குறைந்தது.
டி.சி.எஸ். பங்கு விலை ரூ.27.35 குறைந்து பங்கின் விலை ரூ.854.20 ஆக குறைந்தது.
விப்ரோ பங்கு விலை ரூ.22.95 குறைந்து பங்கின் விலை ரூ.406.25 ஆக குறைந்தது.