மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதில் இருந்தே பங்குகளின் விலைகள் அதிகரித்து வருகிறது.
நேற்று மாலை 372 புள்ளிகள் சரிந்தது. இதனால் பங்குகளின் விலைகள் குறைவாக இருப்பதால், முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்குவதில் ஆர்வம் காண்பித்த காரணத்தினால், இதன் விலைகள் அதிகரிக்கின்றது.
காலையில் வர்த்தகம் தொடங்கிய சிறிது நேரத்தில் (10.05 மணி) மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 513 புள்ளிகள் (3 விழுக்காடு) உயர்ந்து குறியீட்டு எண் 17,735.08 ஆக இருந்தது. இதே போல் தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 170 புள்ளிகள் (3.39 விழுக்காடு) அதிகரித்து குறியீட்டு எண் 5303.90 ஆக இருந்தது.
இரண்டு பங்குச் சந்தைகளிலும் பங்குகளின் விலைகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் அதிக அளவு முதலீடு செய்வதால் பங்கு விலைகள் உயர்வதாக புரோக்கர்கள் தெரிவித்தனர்.
மும்பை பங்குச் சந்தையில் காலை 11.30 நிலவரப்படி சென்செக்ஸ் 789.58 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 17,991.32 ஆக இருந்தது.
இதே போல் மிட் கேப் 209.76, சுமால் கேப் 83.13, பி.எஸ்.இ-500 293.97 புள்ளிகள் அதிகரித்து காணப்பட்டது.
தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 244.40 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 5277.85 ஆக உயர்ந்தது. தேசிய பங்குச் சந்தைகளிலும் எல்லா பிரிவு பங்கு விலைகளும் அதிகரித்தன.
இந்தியாவில் மட்டுமல்லாது மற்ற நாட்டு பங்குச் சந்தைகளிலும் பங்குகளின் விலை அதிகரித்தன. குறிப்பாக அமெரிக்கா, ஜப்பான், ஹாங்காங், சிங்கப்பூர் உட்பட எல்லா நாட்டு பங்குச் சந்தைகளின் குறயீட்டு எண்களும் அதிகரித்தன. சிறிலங்காவில் மட்டும் பங்குச் சந்தையில் சரிவு காணப்பட்டது.