மும்பை பங்குச் சந்தையிலும், தேசிய பங்குச் சந்தையிலும் கடந்த ஏழு நாட்களாக குறைந்து வந்த பங்குகளின் விலை இன்று அதிகரித்தது.
மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் வர்த்தகம் முடிவடையும் போது, நேற்று இறுதி நிலவரத்தை விட 864.13 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 17,594.07 ஆக முடிந்தது. தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 304 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 5,203.40 ஆக முடிந்தது.
அமெரிக்க பொருளாதார வளர்ச்சி பின்னடைவு ஏற்படுவதை தடுக்க அந்நாட்டு ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களை முக்கால் விழுக்காடு குறைத்தது. இதனால் இந்தியாவில் மட்டுமல்லாது மற்ற நாட்டு பங்குச் சந்தைகளிலும் நிலவி வந்த மந்த நிலை மாறி, இன்று பங்கு விலைகள் அதிகரிக்க துவங்கின.
மும்பை பங்குச் சந்தையில் சென்செக்ஸ் பிரிவில் உள்ள ரிலையன்ஸ் இன்டஸ்டிரிஸ் பங்கு விலை ரூ.196.80 பைசா உயர்ந்து. இதன் பங்கு விலை ரூ.2,554.85 ஆக அதிகரித்தது. இன்று நடந்த வர்த்தகத்தில் இதுதான் அதிக பட்சமாக விலை உயர்ந்த பங்கு. இது சென்செக்ஸ் புள்ளிகள் அதிகரிப்பதற்கும் முக்கிய காரணமாக இருந்தது.
இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் அதிகபட்சமாக 17,997.11 வரை அதிகரித்தது. அதே போல் 16,951.03 என்ற அளவிற்கு குறைந்தது.
தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 404.10 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 5,203.40 ஆக உயர்ந்தது. இன்றைய வர்த்தகத்தில் நிஃப்டி அதிகபட்சமாக 5,328.05 வரை அதிகரித்தது. அதே போல் 4,819.60 என்ற அளவிற்கு குறைந்தது.
மும்பை பங்குச் சந்தையில் மிட் கேப் 587.06, சுமால் கேப் 396.95, பி.எஸ்.இ-500 445.81 புள்ளிகள் அதிகரித்தன.
தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி ஜூனியர் 813.25 புள்ளிகளும், சி.என்.எக்ஸ். ஐ.டி. 193.30 பாங்க் நிஃப்டி 576.75 சி.என்.எக்ஸ். 100-314.15 சி.என்.எக்ஸ். டிப்டி 310.10, சி.என்.எக்ஸ். 500- 282.70, சி.என்.எக்ஸ். மிட் கேப் 514.60,நிஃப்டி சி.என்.எக்ஸ். மிட்கேப் 50- 296.40 புள்ளிகள் அதிகரித்தன.
பங்குகளின் இறுதி விலை நிலவரம்:
மும்பை சென்செக்ஸ் பிரிவில் உள்ள பங்குகளில் வர்த்தகம் முடிந்த போது பங்குகள் விலை உயர்வு விபரம்.
ஏ.சி.சி. பங்கு விலை ரூ.27.75 அதிகரித்து பங்கின் விலை ரூ.750.30 ஆக உயர்ந்தது.
அம்புஜா சிமெண்ட் பங்கு விலை ரூ.2.75 அதிகரித்து பங்கின் விலை ரூ.119 ஆக உயர்ந்தது. .
பஜாஜ் ஆட்டோ பங்கு விலை ரூ.153.40 அதிகரித்து பங்கின் விலை ரூ.2215.20 ஆக உயர்ந்தது.
பி.ஹெச்.இ.எல் பங்கு விலை ரூ.160.55 அதிகரித்து பங்கின் விலை ரூ.2145.75 ஆக உயர்ந்தது.
சிப்லா பங்கு விலை ரூ.7.35 அதிகரித்து பங்கின் விலை ரூ.182.30 ஆக உயர்ந்தது.
டி.எல்.எப் பங்கு விலை ரூ.56 அதிகரித்து பங்கின் விலை ரூ.923.70 ஆக உயர்ந்தது.
கிரேசம் பங்கு விலை ரூ.165.55 அதிகரித்து பங்கின் விலை ரூ.3025.25 ஆக உயர்ந்தது.
ஹெச்.டி.எப்.சி பங்கு விலை ரூ.51.55 அதிகரித்து பங்கின் விலை ரூ.2531.85 ஆக உயர்ந்தது. .
ஹெச்.டி.எப்.சி வங்கி பங்கு விலை ரூ.95.10 அதிகரித்து பங்கின் விலை ரூ.1534.75 ஆக உயர்ந்தது. .
ஹின்டால்கோ பங்கு விலை ரூ.10.45 அதிகரித்து பங்கின் விலை ரூ.160.85 ஆக உயர்ந்தது.
ஹிந்துஸ்தான் யூனிலிவர் பங்கு விலை ரூ.3.30 அதிகரித்து பங்கின் விலை ரூ.189.55 ஆக உயர்ந்தது.
ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி பங்கு விலை ரூ.26.05 அதிகரித்து பங்கின் விலை ரூ.1150.80 ஆக உயர்ந்தது.
இன்போசியஸ் பங்கு விலை ரூ.45.40 அதிகரித்து பங்கின் விலை ரூ.1422.95 ஆக உயர்ந்தது.
ஐ.டி.சி பங்கு விலை ரூ.8.55 அதிகரித்து பங்கின் விலை ரூ.192.50 ஆக உயர்ந்தது.
எல்.அண்ட்.டி பங்கு விலை ரூ.93.45 அதிகரித்து பங்கின் விலை ரூ.3748.85 ஆக உயர்ந்தது. .
மாருதி பங்கு விலை ரூ.23.75 அதிகரித்து பங்கின் விலை ரூ.824.25 ஆக உயர்ந்தது. .
மகேந்திரா அண்ட் மகேந்திரா பங்கு விலை ரூ.21.95 அதிகரித்து பங்கின் விலை ரூ.633.05 ஆக உயர்ந்தது. .
என்.டி.பி.சி பங்கு விலை ரூ.27 அதிகரித்து பங்கின் விலை ரூ.223.70 ஆக உயர்ந்தது.
ஓ.என்.ஜி.சி பங்கு விலை ரூ.28.45 அதிகரித்து பங்கின் விலை ரூ.990.80 ஆக உயர்ந்தது. .
ரான்பாக்ஸி பங்கு விலை ரூ.9.70 அதிகரித்து பங்கின் விலை ரூ.350.30 ஆக உயர்ந்தது.
ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் பங்கு விலை ரூ.39.40 அதிகரித்து பங்கின் விலை ரூ.614.55 ஆக உயர்ந்தது.
ரிலையன்ஸ் எனர்ஜி பங்கு விலை ரூ.273.60 அதிகரித்து பங்கின் விலை ரூ.1989.95 ஆக உயர்ந்தது. .
ரிலையன்ஸ் இன்டஸ்டிரிஸ் பங்கு விலை ரூ.196.80 அதிகரித்து பங்கின் விலை ரூ.2554.85 ஆக உயர்ந்தது.
சத்யம் பங்கு விலை ரூ.38.45 அதிகரித்து பங்கின் விலை ரூ.393.10 ஆக உயர்ந்தது.
எஸ்.பி.ஐ. பங்கு விலை ரூ.165.05 அதிகரித்து பங்கின் விலை ரூ.2324.15 ஆக உயர்ந்தது.
டாடா மோட்டார்ஸ் பங்கு விலை ரூ.10.25 அதிகரித்து பங்கின் விலை ரூ.668.50 ஆக உயர்ந்தது.
டாடா ஸ்டீல் பங்கு விலை ரூ.25.75 அதிகரித்து பங்கின் விலை ரூ.696.80 ஆக உயர்ந்தது.
டி.சி.எஸ். பங்கு விலை ரூ.67.80 அதிகரித்து பங்கின் விலை ரூ.867.10 ஆக உயர்ந்தது.
விப்ரோ பங்கு விலை ரூ.2.25 அதிகரித்து பங்கின் விலை ரூ.431.10 ஆக உயர்ந்தது.
இன்று சென்செக்ஸ் பிரிவில் பார்தி ஏர்டெல் பங்கு விலை மட்டும் குறைந்தது.
பார்தி ஏர்டெல் பங்கு விலை ரூ.2.55 குறைந்து பங்கின் விலை ரூ.846.75 ஆக குறைந்தது.