பங்குச் சந்தைகளில் காலையில் நிலவிய நெருக்கடி, பகல் 12 மணிக்கு பிறகு மாறியது.
இன்று மாலை வர்த்தகம் முடிவடைந்த பிறகு மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 875.41 புள்ளிகள் குறைந்து குறியீட்டு எண் 16,729.94 ஆக இருந்தது.
இதே போல் தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 309.50 புள்ளிகள் குறைந்து குறியீட்டு எண் 4,899.30 ஆக இருந்தது.
மும்பை பங்குச் சந்தையிலும், தேசிய பங்குச் சந்தையிலும் காலையில் வர்த்தகம் தொடங்கிய சிறிது நேரத்தில் உயர்ந்தபட்ச அளவிற்கு பங்குகளின் விலைகள் குறைந்தன.
மும்பை சென்செக்ஸ் 2,029.05 புள்ளிகளும், நிஃப்டி 630.45 புள்ளிகளும் குறைந்தன. இதனால் காலை 1 மணி நேரம் வர்த்தகம் நிறுத்தப்பட்டது.
இந்த நேரத்தில் மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம் இந்திய பொருளாதாரம் வலுவான நிலையில் உள்ளது. இந்திய நிறுவனங்களின் நிலையும் பலமாக இருக்கின்றது. மற்ற நாடுகளின் நிலைமையில் இருந்து இந்திய சூழ்நிலை மாறுபட்டது. எனவே முதலீட்டாளர்கள் பீதி அடைய வேண்டாம் என்று நம்பிக்கை ஊட்டினார்.
இதன் பிறகு வர்த்தகம் துவங்கிய போது சிறிது முன்னேற்றம் காணப்பட்டது. பங்குச் சந்தைகளில் அதிக அளவு பாதிப்பில்லாமல், பங்குகளின் விலை அதிகரிக்கத் துவங்கியது.
மதியம் 3 மணிக்கு பிறகு குறிப்பிடும்படி முன்னேற்றம் இருந்தது. பங்குச் சந்தையில் வர்த்தகம் முடிவடைந்த பிறகு, மும்பை சென்செக்ஸ் நேற்றைய இறுதி நிலவரத்தைவிட 875.41 புள்ளிகள் குறைந்து குறியீட்டு எண் 16,729.94 புள்ளிகளாக முடிவடைந்தது.
இதே போல் நிஃப்டி 309.80 புள்ளிகள் குறைந்து குறியீட்டு எண் 4899.30 ஆக இருந்தது.
நேற்றை இறுதி நிலவரத்தை விட, மும்பை பங்குச் சந்தையின் மிட் கேப் 679.74, சுமால் கேப் 883.27, பி.எஸ்.இ500 458.11 புள்ளிகள் குறைந்தது.
தேசிய பங்குச் சந்தையின் நிப்டி ஜுனியர் 675.40, சி.என்.எக்ஸ் ஐ.டி 159.65, பாங்க் நிஃப்டி 356.50, சி.என்.எக்ஸ்100- 308.35, சி.என்.எக்ஸ் டிப்டி 274.65, சி.என்.எக்ஸ் 500- 291.25, மிட் கேப் 522.85, மிட் கேப் 50- 326.55 புள்ளிகள் குறைந்தன.
- இன்று வர்த்தகம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே மும்பை சென்செக்ஸ் 2273 புள்ளிகள் குறைந்ததால் பங்குச் சந்தை வர்த்தகம் ஒரு மணி நேரம் நிறுத்தப்பட்டது.
- பங்குச் சந்தையில் பங்குகளின் விலை அல்லது குறியீட்டு எண் 10 விழுக்காடு அதிகரித்தாலோ அல்லது குறைந்தாலோ, பங்கு வர்த்தகம் நிறுத்தப்படும். இந்த முறையை சர்க்யூட் பிரேக்கர் என அழைக்கின்றார்கள்.
-இன்றைய வர்த்தகத்தில் தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி ஒரு நிலையில் 5230.35 ஆக அதிகரித்தது. இதற்கு நேர் மாறாக 4448.50 புள்ளிகளாக குறைந்தது.
- இதே போல் மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் ஒரு நிலையில் 15,3332.42 புள்ளிகளாக குறைந்தது.
- ஜனவரி 8 ந் தேதி முதல் இன்று வரை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் புள்ளிகள் 25 விழுக்காடு குறைந்துள்ளது.
பங்குகள் விலை நிலவரம்!
சென்செக்ஸ் பிரிவில் உள்ள பங்குகளில் பார்தி ஏர்டெல், டாடா மோட்டார்ஸ் ஆகிய இரு நிறுவனங்களின் பங்கு விலை மட்டு்ம் அதிகரித்தன. மற்ற 28 நிறவன பங்குகளின் விலை குறைந்தது.
பார்தி ஏர்டெல் பங்கு விலை 2.54 விழுக்காடு அதிகரித்து பங்கின் விலை ரூ.849.30 ஆக அதிகரித்தது.
டாடா மோட்டார்ஸ் பங்கு விலை 0.72 விழுக்காடு அதிகரித்து பங்கின் விலை ரூ.658.25 ஆக உயர்ந்தது.
ஏ.சி.சி பங்கு விலை 0.69 விழுக்காடு சரிந்து பங்கின் விலை ரூ.722.55 ஆக குறைந்தது.
அம்புஜா சிமெண்ட் பங்கு விலை 8.57 விழுக்காடு குறைந்து பங்கின் விலை ரூ.116.25 ஆக குறைந்தது.
பஜாஜ் ஆட்டோ பங்கு விலை 0.12 விழுக்காடு சரிந்து பங்கின் விலை ரூ.2061.80 ஆக குறைந்தது.
பி.ஹெச்.இ.எல் பங்கு விலை 6.07 விழுக்காடு சரிந்து பங்கின் விலை ரூ.1985.20 ஆக குறைந்தது.
சிப்லா பங்கு விலை 8.14 விழுக்காடு சரிந்து பங்கின் விலை ரூ.174.95 ஆக குறைந்தது.
டி.எல்.எப் பங்கு விலை 3.98 விழுக்காடு சரிந்து பங்கின் விலை ரூ.867.70 ஆக குறைந்தது.
கிரேசம் பங்கு விலை 5.46 விழுக்காடு குறைந்து பங்கின் விலை ரூ.2859.70 ஆக குறைந்தது.
ஹெச்.டி.எப்.சி பங்கு விலை 8.10விழுக்காடு சரிந்து பங்கின் விலை ரூ.2480.30 ஆக குறைந்தது.
ஹெச்.டி.எப்.சி வங்கி பங்கு விலை 5.13 விழுக்காடு சரிந்து பங்கின் விலை ரூ.1439.65 ஆக குறைந்தது.
ஹின்டால்கோ பங்கு விலை 9.37 விழுக்காடு சரிந்து பங்கின் விலை ரூ.150.40 ஆக குறைந்தது.
ஹிந்துஸ்தான் யூனிலிவர் பங்கு விலை 6.78 விழுக்காடு சரிந்து பங்கின் விலை ரூ.186.25 ஆக குறைந்தது.
ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி பங்கு விலை 4.13 விழுக்காடு சரிந்து பங்கின் விலை ரூ.1124.75 ஆக குறைந்தது.
இன்போசியஸ் பங்கு விலை 0.91 விழுக்காடு சரிந்து பங்கின் விலை ரூ.1377.55 ஆக குறைந்தது.
ஐ.டி.சி பங்கு விலை 9.54 விழுக்காடு சரிந்து பங்கின் விலை ரூ.183.95 ஆக குறைந்தது.
-எல்.அண்ட்.டி பங்கு விலை 0.92 விழுக்காடு சரிந்து பங்கின் விலை ரூ.3655.40 ஆக குறைந்தது.
மாருதி பங்கு விலை 0.90 விழுக்காடு சரிந்து பங்கின் விலை ரூ.800.50 ஆக குறைந்தது.
மகேந்திரா அண்ட் மகேந்திரா பங்கு விலை 9.14 விழுக்காடு சரிந்து பங்கின் விலை ரூ.611.10 ஆக குறைந்தது.
என்.டி.பி.சி பங்கு விலை 4.35 விழுக்காடு சரிந்து பங்கின் விலை ரூ.196.70 ஆக குறைந்தது.
ஓ.என்.ஜி.சி பங்கு விலை 13.62 விழுக்காடு சரிந்து பங்கின் விலை ரூ.962.35 ஆக குறைந்தது.
ரான்பாக்ஸி பங்கு விலை 6.22 விழுக்காடு சரிந்து பங்கின் விலை ரூ.340.60 ஆக குறைந்தது.
ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் பங்கு விலை 37.75 விழுக்காடு சரிந்து பங்கின் விலை ரூ.575.15 ஆக குறைந்தது.
ரிலையன்ஸ் எனர்ஜி பங்கு விலை 3.36 விழுக்காடு சரிந்து பங்கின் விலை ரூ.1716.35 ஆக குறைந்தது.
ரிலையன்ஸ் இன்டஸ்டிரிஸ் பங்கு விலை 7.32 விழுக்காடு சரிந்து பங்கின் விலை ரூ.2358.05 ஆக குறைந்தது.
சத்யம் பங்கு விலை 4.51 விழுக்காடு குறைந்து பங்கின் விலை ரூ.354.65 ஆக குறைந்தது.
எஸ்.பி.ஐ பங்கு விலை 1.87 விழுக்காடு சரிந்து பங்கின் விலை ரூ.2159.10 ஆக குறைந்தது.
டாடா ஸ்டீல் பங்கு விலை 7.11 விழுக்காடு சரிந்து பங்கின் விலை ரூ.671.05 ஆக குறைந்தது.
டி.சி.எஸ் பங்கு விலை 4.38 விழுக்காடு சரிந்து பங்கின் விலை ரூ.799.30 ஆக குறைந்தது.
விப்ரோ பங்கு விலை 2.49 விழுக்காடு சரிந்து பங்கின் விலை ரூ.428.85 ஆக குறைந்தது.