Publish Date: Mon, 21 Jan 2008 (20:19 IST)
Updated Date: Mon, 21 Jan 2008 (20:18 IST)
மும்பை தங்கம் வெள்ளி சந்தையில் இன்று மாலை நிலவரப்படி பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.215-ம், 24 காரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.65-ம் குறைந்தது.
காலையில் வர்த்தகம் தொடங்கிய போது 1 கிலோ பார் வெள்ளியின் விலை ரூ.20,600 ஆக இருந்தது. தொழில் துறையினர் வெள்ளியை வாங்க ஆர்வம் காட்டாத காரணத்தினால் இதன் விலை ரூ.215 குறைந்து மாலையில் இறுதி விலையாக ரூ 20,470 இல் முடிந்தது.
காலையில் 24 காரட் தங்கத்தின் விலை 10 கிராம் ரூ.11.295 ஆகவும், 22 காரட் தங்கத்தின் விலை 10 கிராம் ரூ.11,245 ஆக இருந்தது. இறுதியில் மாலையில் இதன் விலை 10 கிராமுக்கு ரூ. 65 குறைந்தது.
சர்வதேச சந்தையில் இருந்து வந்த தகவல்களால், தங்கம் வாங்குவதில் யாரும் ஆர்வம் காட்டவில்லை. இதுவே விலைகள் குறைந்ததற்கு காரணம் என்று வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
இன்றைய இறுதி விலை நிரவரம்:
24 காரட் தங்கம் 10 கிராம் ரூ.11,240 (வெள்ளிக் கிழமை 11,305)
22 காரட் தங்கம் 10 கிராம் ரூ.11,190 (11,255)
பார் வெள்ளி கிலோ ரூ.20,470 (20,685)