மும்பை பங்குச் சந்தையில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போதே சென்செக்ஸ் 195.21 புள்ளிகள் குறைந்து குறியீட்டு எண் 19,505.61 ஆக இருந்தது (கடந்த ஐந்து நாட்களாக சென்செக்ஸ் 1,325 புள்ளிகள் குறைந்துள்ளது).
இதேபோல் தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 59.60 புள்ளிகள் குறைந்து குறியீட்டு எண் 5,854.00 புள்ளிகளாக இருந்தது.
மும்பை பங்குச் சந்தையில் காலை 12.15 மணியளவில் சென்செக்ஸ் 75.16 புள்ளிகள் குறைந்து, குறியீட்டு எண் 19,625.66 ஆக இருந்தது. இதேபோல் மிட் கேப் 79.50, சுமால் கேப் 99.90, பி.எஸ்.இ.-500 48.96 புள்ளிகள் குறைந்து காணப்பட்டன.
இதே போல் தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 19.20 புள்ளிகள் குறைந்து குறியீட்டு எண் 5,894.00 ஆக இருந்தது. மற்ற எல்லா பிரிவு குறியீட்டு எண்கள் 0.40 முதல் 0.94 விழுக்காடு வரை குறைந்து காணப்பட்டன.
இன்று காலை நடந்த வர்த்தகத்தில் ரியல் எஸ்டேட், மின் உற்பத்தி, இயந்திரங்கள் உற்பத்தி நிறுவனங்களின் பங்குகளை அதிக அளவு விற்பனை செய்தனர்.
தேசிய பங்குச் சந்தையில் 791 பங்குகளின் விலை அதிகரித்தது. 394 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. மும்பை பங்குச் சந்தையில் 1581 பங்குகளின் விலை குறைந்தது. 1032 பங்குகளின் விலை குறைந்தது.
இன்று முழுவதும் பங்குகளின் விலைகளில் ஏற்ற இறக்கம் இருக்கும் என்று மார்க்கெட் வட்டாரங்கள் கருதுகின்றன.