மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் நான்காவது நாளாக இன்றும் குறைந்தது.
காலையில் இருந்து குறைந்து வந்த சென்செக்ஸ் பிரிவில் உள்ள பங்குகளின் விலைகள் 12 மணியளவில் அதிகரிக்க துவங்கியது. ஆனால் இந்த நிலை மதியம் 3 மணியளவில் மாறி மீண்டும் சென்செக்ஸ் குறைய ஆரம்பித்தது. இறுதியில் நேற்று இறுதி நிலவரத்தை விட 167.29 புள்ளிகள் குறைந்து குறியீட்டு எண் 19,700.82 ஆக இறங்கியது.
இதே போல் பி.எஸ்.இ.-500 பிரிவு குறியீட்டு எண்ணும் 19.40 புள்ளிகள் குறைந்தன. ஆனால் மிட் கேப் 72.81, சுமால் கேப் 218.08 புள்ளிகள் அதிகரித்தது.
இதே போல் தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 22.55 புள்ளிகள் குறைந்து குறியீட்டு எண் 5,913.20 புள்ளிகளாக குறைந்தது. தேசிய பங்குச் சந்தையில் எல்லா பிரிவு குறியீட்டு எண்களும் குறைந்தன.