Newsworld Finance Market 0801 16 1080116027_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தங்கம், வெள்ளி விலை சரிவு!

Advertiesment
மும்பை தங்கம்
, புதன், 16 ஜனவரி 2008 (14:38 IST)
மும்பதங்கம், வெள்ளி சந்தையிலஇன்று 24 காரடதங்கத்தினவிலை 10 கிராமுக்கூ.185-், பார் வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.120-ம் குறைந்தது.

சிங்கப்பூர் சந்தையிலும் இன்று தங்கத்தின் விலை குறைந்தது. கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வந்தது. இன்று தங்கத்தில் முதலீடு செய்திருந்தவர்கள் விற்பனை செய்ய தொடங்கியதால், இதன் விலைகள் குறைந்தது என்று வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

நியூயார்க் சந்தையிலும் தங்கத்தின் விலை குறைந்தது. இன்று 1 அவுன்ஸ் தங்கம் 895.75/896.75 டாலராக இருந்தது. நேற்றைய விலை 899.50/900.20 டாலர். கடந்த வாரம் இதுவரை இல்லாத அளவிற்கு 1 அவுன்ஸ் தங்கத்தின் விலை 914 டாலராக அதிகரித்தது நினைவிருக்கலாம்.

வெள்ளியின் விலையும் குறைந்தது. 1 அவுன்ஸ் வெள்ளியின் விலை 16.04/16.09 டாலராக இருந்தது. நேற்றைய விலை 16.10/16.15 டாலர்கள்.


இன்றைகாலவிலநிலவரம் ;

24 காரடதங்கம் 10 கிராமூ.11,390
22 காரடதங்கம் 10 கிராமூ.11,340
பாரவெள்ளி 1 கிலூ.20,600.

Share this Story:

Follow Webdunia tamil