Publish Date: Fri, 11 Jan 2008 (15:25 IST)
Updated Date: Fri, 11 Jan 2008 (15:24 IST)
மும்பை தங்கம் வெள்ளி சந்தையில் இன்று 24 காரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.230-ம், பார் வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.415-ம் அதிகரித்துள்ளது.
சர்வதேச சந்தையில் இன்று தங்கத்தின் விலை அதிகரித்தது.
இன்று சிங்கப்பூர் சந்தையில் 1 அவுன்ஸ் தங்கத்தின் விலை 900 டாலராக அதிகரித்தது. இதற்கு காரணம் அமெரிக்க ரிசர்வ் வங்கியின் சேர்மன் பென் பெர்னான்கி, அமெரிக்காவில் மீண்டும் வட்டி குறைப்பு இருக்கும் என்று சூசகமாக அறிவித்ததே என்று வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
நியூயார்க் சந்தையில் இது வரை இல்லாத அளவிற்கு தங்கத்தின் விலை அதிகரித்தது. இன்று 1 அவுன்ஸ் தங்கத்தின் விலை 898 டாலராக இருந்தது. (நேற்றைய விலை 889.90/890.60 டாலர்). வெள்ளியின் விலை சிறிதளவு அதிகரித்தது. 1 அவுன்ஸ் 16.13/16.18 டாலர் (நேற்றைய விலை 16.12/16.17).
இன்றைய காலை விலை நிலவரம் :
24 காரட் தங்கம் 10 கிராம் ரூ.11,420
22 காரட் தங்கம் 10 கிராம் ரூ. 11,370
பார் வெள்ளி 1 கிலோ ரூ.20,650
Webdunia
Publish Date: Fri, 11 Jan 2008 (15:25 IST)
Updated Date: Fri, 11 Jan 2008 (15:24 IST)