பங்குச் சந்தையில் காலையில் இருந்த நிலை பிற்பகல் 1 மணியளவில் மாறியது.
மும்பை பங்குச் சந்தையில் காலையில் வர்த்தகம் தொடங்கிய போது சென்செக்ஸ் 120.86 புள்ளிகள் அதிகரித்து, குறியீட்டு எண் 20,702.94 ஆக அதிகரித்தது. இன்று அதிக அளவு பங்குகளை வாங்க முதலீட்டு நிறுவனங்கள் ஆர்வம் காண்பித்தனர். இதனால் சென்செக்ஸ் 232.25 புள்ளிகள் அதிகரித்து, குறியீட்டு எண் 20,814.33 ஆக உயர்ந்தது. ஆனால் மதியம் 1 மணி அளவில் காலையில் இருந்த நிலைமை மாற துவங்கியது. சென்செக்ஸ் 9.90 புள்ளிகள் குறைந்து குறியீட்டு எண் 20,572.19 ஆக குறைந்தது.
இதே போல் மிட் கேப் 151.36, சுமால் கேப் 334.74, பி.எஸ்.இ-500 70.23 புள்ளிகள் குறைந்தன.
தேசிய பங்குச் சந்தையில் வர்த்தகம் தொடங்கிய போது நிஃப்டி 10 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 6,166.65 ஆக இருந்தது. சுமார் 1 மணியளவில் நிஃப்டி 33.40 புள்ளிகள் குறைந்து, குறியீட்டு எண் 6126.55 ஆக இருந்தது. தேசிய பங்குச் சந்தையில் வங்கி பிரிவு தவிர மற்ற குறியீட்டு எண்கள் குறைந்து இருந்தன. மற்ற பிரிவுகளில் உள்ள குறியீட்டு எண்கள் 0.23 முதல் 1.97 விழுக்காடு வரை குறைந்து இருந்தன.
சென்செக்ஸ் பிரிவில் உள்ள பங்குகளில் ஏ.சி.சி, அம்புஜா சிமெண்ட், ஹெச்.டி.எப்.சி, எல்.அண்ட்.டி, ரான்பாக்ஸி, சத்யம், எஸ்.பி.ஐ, பார்தி ஏர்டெல், ஹீன்டால்கோ, மாருதி, மகேந்திரா அண்ட் மகேந்திரா, விப்ரோ, பி.ஹெச்.இ.எல், இன்போசியஸ், எல்.அண்ட்.டி, ரான்பாக்ஸி, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், ரிலையன்ஸ் எனர்ஜி, டி.எல்.எப், ஐ.டி.சி, டாடா மோட்டார்ஸ், டாடா ஸ்டீல் ஆகிய நிறுவனங்களின் பங்கு விலை குறைந்து இருந்தன.
என்.டி.பி.சி, டி.சி.எஸ், பஜாஜ் ஆட்டோ, கிரேசம், ஹெச்.டி.எப்.சி வங்கி, ரிலையன்ஸ் இன்டஸ்டிரிஸ், சிப்லா ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி ஆகியவற்றின் விலை அதிகரித்து இருந்தது.
அந்நிய நாடுகளின் பங்குச் சந்தையில் அமெரிக்க பங்குச் சந்தையின் குறியீட்டு எண் அதிகரித்து இருந்தது. ஐரோப்பிய நாடுகளில் பிரான்ஸ் பங்குச் சந்தையில் பங்கு விலைகள் அதிகரித்தன. மற்ற நாடுகளில் பங்குச் சந்தை குறியீட்டு எண்கள் குறைந்து இருந்தன.
மலேசியாவின் கோலாலம்பூர் காம்போசிட் 1.92, பிலிப்பைன்ஸ் காம்போசிட் 49.10, சிங்கப்பூரின் ஸ்டெர்ய்ட் டைம்ஸ் 3,344.53 புள்ளிகள் அதிகரித்தன. ஹாங்காங்கின் ஹாங் சங் 417.63 புள்ளிகள் குறைந்திருந்தது.
இந்திய பங்குச் சந்தைகளில் இன்று ஒரே நிலையில்லாமல் பங்குகளின் விலைகளில் அதிக மாற்றம் இருக்கும் என்று வர்த்தகர்கள் கருத்து தெரிவித்தனர்.