மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 287 புள்ளிகளும், தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 115 புள்ளிகள் குறைந்தன.
இன்று இரண்டு பங்குச் சந்தைகளிலும் காலையில் வர்த்தகம் தொடங்கிய போது குறியீட்டு எண்கள் அதிகரித்து இருந்தது. இந்த நிலை மதியம் உணவு இடைவேளை வரை தொடர்ந்தது. இதற்கு பின் படிப்படியாக பங்கு விலைகள் சரிந்து, இறுதியில் இரண்டு பங்குச் சந்தைகளிலும் எல்லா பிரிவு பங்கு குறியீட்டு எண்களும் குறைந்தன.
மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் இது வரை இல்லாத அளவிற்கு 21,206.77 புள்ளிகளாக உயர்நதது. இதற்கு எதிராக 20,530.07 புள்ளிகளாகவும் குறைந்தது. மாலை வர்த்தகம் முடியும் போது, நேற்றைய இறுதி நிலவரத்தை விட 1287.70 புள்ளிகள் குறைந்து சென்செக்ஸ் 20,582.08 புள்ளிகளாக முடிந்தது.
தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 130 புள்ளிகள் குறைந்தது. அதற்கு பிறகு பங்குகளின் விலைகள் சிறிது அதிகரித்ததால் இறுதியில் 115 புள்ளிகள் குறைந்து குறியீட்டு எண் 6,156.98 புள்ளிகளாக முடிந்தது.
இன்று நுகர்வோர் பொருட்கள் உற்பத்தி நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், உலோக உற்பத்தி நிறுவனங்கள் ஆகியவற்றின் குறியீட்டு எண்கள் அதிகளவு குறைந்தது. வங்கி பங்குகளின் விலைகள் முதலில் குறைந்தாலும் பிறகு உயர்ந்தது.
மும்பை பங்குச் சந்தையின் மிட் கேப் 329.54, சுமால் கேப் 511.32, பி.எஸ்.இ-500 212.49 புள்ளிகள் குறைந்தன. இதே போல் தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண்கள் 0.38 விழுக்காடு முதல் 4.34 விழுக்காடு வரை குறைந்தன.
சென்செக்ஸ் பிரிவில் உள்ள பங்குகளில் ஹெச்.டி.எப்.சி. வங்கி, எல்.அண்ட் டி, என்.டி.பி.சி., ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், ரிலையன்ஸ் இன்டஸ்டிரிஸ், டி.எல்.எப்., ஏ.சி.சி., அம்புஜா சிமெண்ட், ஹெச்.டி.எப்.சி., இன்போசியஸ், ஐ.டி.சி., மாருதி, மகேந்திரா அண்ட் மகேந்திரா, எஸ்.பி.ஐ., டாடா ஸ்டீல், பஜாஜ் ஆட்டோ, பார்தி ஏர்டெல், கிராசிம், ஹிந்துஸ்தான் யூனிலிவர், ஓ.என்.ஜி.சி., சத்யம், டி.சி.எஸ்., சிப்லா ஆகிய நிறுவனங்களின் பங்கு விலைகள் குறைந்தன.
ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியின் பங்கு விலை மட்டும் அதிகரித்தது.