Newsworld Finance Market 0801 08 1080108063_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மும்பை தங்கம் விலை உயர்வு!

Advertiesment
மும்பை தங்கம் வெள்ளி சந்தை நியூயார்க் 24 காரட் தங்கம் பார் வெள்ளி
மும்பை தங்கம் வெள்ளி சந்தையில் இன்று 24 காரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.40 அதிகரித்தது.

சர்வதேச சந்தையில் வெள்ளியின் விலை சிறிது அதிகரித்தது. ஆனால் மும்பையில் வெள்ளி வாங்க ஆர்வம் அதிகமில்லாத காரணத்தினால், இதன் விலை அதிகரிக்கவில்லை.

டோக்கியோ சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்தது. பெட்ரோலிய கச்சா எண்ணெயின் விலை நேற்று குறைந்தது. ஆனால் இன்று மீண்டும் அதிகரித்தது. இதனால் தங்கத்தில் முதலீடு செய்வது அதிகரித்தது. தங்கத்தில் முதலீடு செய்த நிறுவனங்களும் தங்கத்தை விற்பனை செய்யாமல் இருப்பில் வைத்துக் கொள்வதில் ஆர்வம் காட்டின.

நியூயார்க் சந்தையில் தங்கத்தின் விலை சிறிது அதிகரித்தது. இன்று 1 அவுன்ஸ் தங்கத்தின் விலை 860.00/860.80 டாலராக இருந்தது. (நேற்றைய விலை 859.70/860.40).

வெள்ளியின் விலை 1 அவுன்ஸ் 15.18/15.23 டாலர் (நேற்றைய விலை 15.12/15.17).
இன்றைய காலை விலை நிலவரம்.

24 காரட் தங்கம் 10 கிராம் ரூ.11,020.
22 காரட் தங்கம் 10 கிராம் ரூ.10,970
பார் வெள்ளி 1 கிலோ ரூ.19,845.

Share this Story:

Follow Webdunia tamil