Publish Date: Mon, 07 Jan 2008 (16:28 IST)
Updated Date: Mon, 07 Jan 2008 (16:28 IST)
மும்பை தங்கம் வெள்ளி சந்தையில் பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.165-ம், 24 காரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.55 குறைந்தது.
சர்வதேச சந்தையில் தங்கம், வெள்ளியின் விலை குறைநதது. இதன் எதிரொலியாக மும்பையிலும் விலை குறைந்ததாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
சர்வதேச சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை குறைநதது. இதன் காரணமாக டோக்கியோ சந்தையில் தங்கத்தின் விலை குறைந்தது.
நியூயார்க் சந்தையில் தங்கத்தின் விலை 1 அவுன்சுக்கு 1 டாலர் குறைந்தது. இன்றைய விலை 861.00 முதல் 861.80 டாலர் (வெள்ளிக் கிழமை விலை 862.00/862.70).
வெள்ளி விலை 1 அவுன்ஸ் 15.27/15.32 டாலர் (வெள்ளிக் கிழமை விலை 15.29/15.34).
இன்று காலை விலை நிலவரம்
24 காரட் தங்கம் 10 கிராம் ரூ.10,945.00
22 காரட் தங்கம் 10 கிராம் ரூ.10,895.00
பார் வெள்ளி 1 கிலோ ரூ.19,845.00
Webdunia
Publish Date: Mon, 07 Jan 2008 (16:28 IST)
Updated Date: Mon, 07 Jan 2008 (16:28 IST)