Newsworld Finance Market 0801 04 1080104067_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பங்குச் சந்தை 341 புள்ளி உயர்வு!

Advertiesment
நிஃப்டி மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் டாடா ஸ்டீல் பி.ஹெச்.இ.எல் ஐ.சி.ஐ.சி.ஐ. விப்ரோ ஒ.என்.ஜி.சி பஜாஜ் ஆட்டோ
, வெள்ளி, 4 ஜனவரி 2008 (20:07 IST)
மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு விலைகள் அதிகரித்தன. காலையில் வர்த்தகம் தொடங்கியதில் இருந்தே இரண்டு பங்குச் சந்தைகளிலும் பங்குகளின் விலைகள் தொடர்ந்து அதிகரித்தது.

மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 341.69 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 20,686.89 ஆக முடிந்தது. இதே போல் தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 95.75 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 6,274.30 ஆக முடிந்தது.

இந்திய பங்குச் சந்தை மட்டுமல்லாமல், ஆசியாவில் மற்ற நாட்டு பங்குச் சந்தை குறியீட்டு எண்களும் அதிகரித்தன.

மும்பை பங்குச் சந்தையில் மிட் கேப் 56.19 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 10,113.06 ஆக முடிந்தது.

சுமால் கேப் 12.60 புள்ளிகள் குறைந்து குறியீட்டு எண் 13,884.11 ஆக முடிந்தது.

பி.எஸ்.இ-500 104.44 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 8,850.48 ஆக முடிந்தது.

தேசிய பங்குச் சந்தையில் தகவல் தொழில்நுட்ப பிரிவு தவிர மற்ற எல்லா பிரிவு குறியீட்டு எண்களும் அதிகரித்தன.

இன்று நடைபெற்ற வர்த்தகத்தில் மும்பை பங்குச் சந்தையில் 1,470 பங்குகளின் விலை குறைந்தன. 1,437 பங்கு விலை அதிகரித்தன. 17 பங்குகளின் விலையில் எவ்வித மாற்றமுமில்லை.

சென்செக்ஸ் பிரிவில் உள்ள பங்குகளில் 14 பங்குகளின் விலை அதிகரித்தது. 16 பங்குகளின் விலை குறைந்தது.

சென்செக்ஸ் பிரிவில் உள்ள பங்குகளில் டாடா ஸ்டீல், பி.ஹெச்.இ.எல்., விப்ரோ, ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, பஜாஜ் ஆட்டோ, ஒ.என்.ஜி.சி., டி.எல்.எப்., ஹெச்.டி.எப்.சி., ஹெச்.டி,.எப்.சி. வங்கி, ரான்பாக்ஸி, ஹின்டார்கோ, எல்.அண்.டி., ரிலையன்ஸ் இன்டஸ்டிரிஸ், ஹிந்துஸ்தான் யூனிலிவர், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் ஆகியவைகளின் பங்கு விலைகள் அதிகரித்தது.

மாருதி, மகேந்திரா அண்ட் மகேந்திரா, டி.சி.எஸ்., ஏ.சி.சி., அம்புஜா சிமென்ட், இன்போசியஸ், என்.டி.பி.சி., ரிலையன்ஸ் எனர்ஜி, டாடா மோட்டார்ஸ், பார்தி ஏர்டெல், என்.டி.பி.சி, எஸ்.பி.யை, சத்யம், சிப்லா ஆகிய நிறுவனங்களின் பங்கு விலை குறைந்தது.

Share this Story:

Follow Webdunia tamil