Publish Date: Fri, 04 Jan 2008 (16:12 IST)
Updated Date: Fri, 04 Jan 2008 (16:11 IST)
மும்பை தங்கம் வெள்ளி சந்தையில் இன்று 24 காரட் தங்கத்தின் 10 கிராமுக்கு ரூ.40-ம், பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.70-ம் குறைந்தது.
இன்று நகை உற்பத்தியாளர்கள் தங்கத்தை வாங்குவதில் தயக்கம் காட்டியதால், இதன் விலை குறைந்ததாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
பெட்ரோலிய கச்சா எண்ணெயின் விலை சர்வதேச சந்தையில் அதிகரிப்பதாலும், அமெரிக்க டாலரின் மதிப்பு குறைந்து வருவதால் டோக்கியோ சந்தையில் இது வரை இல்லாத அளவு தங்கத்தின் விலை அதிகரித்தது.
நியுயார்க் சந்தையில் தங்கத்தின் விலை 1 அவுன்ஸ் 865.90/866.70 டாலராக இருந்தது. (நேற்றைய விலை 862.90/863.60).
வெள்ளியின் விலை 1 அவுன்ஸ் 15.38/15.43 டாலராக இருந்தது. (நேற்றைய விலை 15.35/15.40).
இன்று காலை விலை நிலவரம்
24 காரட் தங்கம் 10 கிராம் ரூ. 11,045
22 காரட் தங்கம் 10 கிராம் ரூ.10,995
பார் வெள்ளி 1 கிலோ ரூ.19,975
Webdunia
Publish Date: Fri, 04 Jan 2008 (16:12 IST)
Updated Date: Fri, 04 Jan 2008 (16:11 IST)