Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பங்குச் சந்தைகளில் ஏற்றம்!

பங்குச் சந்தைகளில் ஏற்றம்!
, வெள்ளி, 4 ஜனவரி 2008 (13:26 IST)
மும்பை பங்குச் சந்தையிலும், தேசிய பங்குச் சந்தையிலும் இன்று காலையில் வர்த்தகம் தொடங்கியவுடனேயே பங்குவிலைகள் அதிகரித்தன. நேற்று இருந்த நிலைமை மாறியது. நேற்று எல்லா பிரிவு பங்கு விலைகளும் குறைந்தது. ஆனால் இன்று தகவல் தொழில்நுட்ப பிரிவு தவிர, மற்ற குறீயீட்டு எண்கள் அதிகரித்தன.

இந்தியாவின் பங்குச் சந்தையில் மட்டுமல்லாது மற்ற அந்நிய நாட்டு பங்குச் சந்தைகளிலும், குறிபாபாக ஆசிய நாட்டு பங்குச் சந்தைகளில் பங்குகளின் விலைகள் உயர்ந்தன.

ஜப்பானின் நிக்கி 4 விழுக்காடு, ஹாங்காங்கின் ஹாங்செங் 2 விழுக்காடு அதிகரித்தது. இதே போல் சிங்கப்பூர், சீனாவின் சாங்காய் பங்குச் சந்தைகளின் குறியீட்டு எண்களும் உயர்ந்தன. அமெரிக்காவின் நாஸ்டாக் குறியீட்டு எண் மட்டும் குறைந்தது.
மும்பை பங்குச் சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கிய போது, சென்செக்ஸ் 178 புள்ளிகள் அதிகரித்தது. தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 0000 புள்ளி உயர்ந்து இருந்தது.

காலை 11.30 மணியளவில் மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 166.39 புள்ளிகள் உயர்ந்து குறியீட்டு எண் 20,511.58 ஆக இருந்தது.

இதேபோல் மிட் கேப் 96.38, சுமால் கேப் 100.26, பி.எஸ்.இ-500 77.83 புள்ளிகள் உயர்ந்து இருந்தது.

தேசிய பங்குச் சந்தையின் நிஃடி 70.20 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 6248.75 ஆக இருந்தது.

அந்நிய நாடுகளில் இருந்து வந்த தகவல்களால் உள்ளாட்டு முதலீட்டு நிறுவனங்களும், முதலீட்டாளர்களும் பங்குகள் வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டினர். உள்நாட்டு முதலீட்டாளர்கள் சுமால் கேப், மற்றும் மிட் கேப் பிரிவு பங்குகளை வாங்குவதில் ஆர்வம் காட்டினார்கள். அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் அதிக அளவு பங்குகளை விற்பனை செய்தனர்.

தேசிய பங்குச் சந்தையில் தகவ்ல் தொழில் நுட்ப பிரிவு தவிர மற்ற பிரிவில் உள்ள பங்குகளின் விலை அதிகரித்தது. இவற்றின் குறியீட்டு எண்கள் 0.55 விழுக்காடு முதல் 1.23 விழுக்காடு வரை அதிகரித்தது.

மும்பை சென்செக்ஸ் பிரிவில் உள்ள பங்குகளில் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி, ஐ.டி.சி, எல்.அண்ட்.டி, ஒ.என்.ஜி.சி, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ்,ரிலையன்ஸ் இன்டஸ்டிரிஸ், டாடா ஸ்டீல், ஏ.சி.சி, பஜாஜ் ஆட்டோ, பார்தி ஏர்டெல், டி.எல்.எப், ஹின்டால்கோ, ரான்பாக்ஸி, சத்யம், பி.ஹெச்.இ.எல், ஹெச்.டி.எப்.சி, ஆகிய நிறுவனங்களின் பங்கு விலை அதிகரித்தது.

என்.டி.பி.சி, விப்ரோ, அம்புஜா சிமென்ட், சிப்லா, கிரேசம், ஹெச்.டி.எப்.சி வங்கி, இன்போசியஸ், மாருதி, மகேந்திரா அண்ட் மகேந்திரா, ரிலையன்ஸ் எனர்ஜி, டி.சி.எஸ் ஆகிய நிறுவனங்களின் பங்கு விலை குறைந்தது.

Share this Story:

Follow Webdunia tamil