Newsworld Finance Market 0801 02 1080102027_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பங்குச் சந்தை 102 புள்ளிகள் சரிவு!

Advertiesment
பங்குச் சந்தை 102 புள்ளிகள் சரிவு!
, புதன், 2 ஜனவரி 2008 (13:12 IST)
மும்பை பங்குச் சந்தையிலும், தேசிய பங்குச் சந்தையிலும் காலையில் வர்த்தகம் தொடங்கிய போது பங்குளின் விலைகள் அதிகரித்தன. ஆனால் இந்த நிலைமை ஐந்து நிமிடம் கூட நீடிக்க வில்லை. இரண்டு பங்குச் சந்தைகளிலும் எல்லா பிரிவுகளிலும் உள்ள பங்குகளின் விலைகள் குறைவதும், உயர்வதுமான போக்கு தொடர்கிறது.

மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் காலை 10 மணியளவில் 119.20 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 20,419.43 ஆக இருந்தது. இதே போல் தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 26.40 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 6170.75 ஆக இருந்தது.

அதற்கு பிறகு இரண்டு பங்குச் சந்தைகளிலும் பங்குகளின் விலைகள் குறைய தொடங்கின. தேசிய பங்குச் சந்தையில் காலை 11.15 மணியளவில் 44 புள்ளிகள் குறைந்து குறியீட்டு எண் 6,100.35 ஆக இருந்தது. மற்ற பிரிவுகளில் நிஃப்டி ஜீனியர், பேங்க் நிஃப்டி, மிட் கேப் பிரிவு தவிர மற்ற பிரிவில் உள்ள குறியீட்டு எண் 0.17 விழுக்காடு முதல் 1.26 விழுக்காடு வரை குறைந்தது.

மும்பை பங்குச் சந்தையிலி காலை 11.15 மணியளவில் சென்செக்ஸ் 102.25 புள்ளிகள் குறைந்து குறியீ்ட்டு எண் 20,198.45 ஆக குறைந்தது. இதே போல் மிட் கேப் 152 புள்ளிகள், பி.எஸ்.இ-500 16.05 புள்ளிகள் குறைந்தது. சுமால் கேப் பிரிவின் குறியீட்டு எண் மட்டும் 15.54 புள்ளிகள் அதிகரித்து இருந்தது.
அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட மற்ற அந்நிய நாட்டு சந்தைகளிலும் பங்கு விலைகள் குறைந்தன.

மும்பை பங்குச் சந்தையில் சென்செக்ஸ் பிரிவில் உள்ள பங்குகளில் இன்போசியஸ், எல்.அண்ட்.டி., மாருதி, மகேந்திரா அண்ட் மகேந்திரா, என்.டி.பி.சி., ரான்பாக்ஸி, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், ரிலையன்ஸ் இன்டஸ்டிரிஸ், சத்யம், எஸ்.பி.ஐ., டாடா மோட்டார்ஸ், டாடா ஸ்டீல், டி.சி.எஸ்., விப்ரோ, ஏ.சி.சி., அம்புஜா சிமென்ட், சிப்லா, கிராசிம், ஹெச்.டி.எப்.சி. வங்கி, என்.டி.பி.சி., டி.எல்.எப்., ஹின்டால்கோ, ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, ஹிந்துஸ்தான் யூனிலிவர் ஆகிய நிறுவனங்களின் பங்கு விலை குறைந்தது.

ஒ.என்.ஜி.சி., ரிலையன்ஸ் எனர்ஜி ஆகிய நிறுவனங்களின் பங்கு விலை அதிகரித்தது.

Share this Story:

Follow Webdunia tamil