Publish Date: Mon, 31 Dec 2007 (20:14 IST)
Updated Date: Mon, 31 Dec 2007 (20:14 IST)
மும்பை தங்கம் வெள்ளி சந்தையில் காலையில் இருந்த நிலை மாலையில் மாறியது. காலையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை அதிகரித்தது. ஆனால் மாலையில் 24 காரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.20 குறைந்தது. அதே நேரத்தில் பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.105 அதிகரித்தது.
அந்நிய நாட்டு சந்தைகளில் இருந்து வந்த தகவல்களால் தங்கத்தின் விலை குறைந்தாக வியாபாரிகள் தெரிவித்தனர். தொழில் துறையினர் வெள்ளி வாங்குவதில் ஆர்வம் காட்டியதால் வெள்ளியின் விலை அதிகரித்ததாக தெரிவித்தனர்.
இன்று இறுதி விலை நிலவரம்.
24 காரட் தங்கம் 10 கிராம் ரூ.10,745 (சனி விலை 10,765)
22 காரட் தங்கம் 10 கிராம் ரூ.10,695 ( 10,715)
பார் வெள்ளி கிலோ ரூ.19,560 (19,455).
Webdunia
Publish Date: Mon, 31 Dec 2007 (20:14 IST)
Updated Date: Mon, 31 Dec 2007 (20:14 IST)