Newsworld Finance Market 0712 27 1071227053_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மும்பை பங்குச் சந்தைக் குறியீடு 24 புள்ளி உயர்வு!

Advertiesment
மும்பை பங்குச் சந்தை
, வியாழன், 27 டிசம்பர் 2007 (20:14 IST)
மும்பை பங்குச் சந்தையிலும், தேசிய பங்குச் சந்தையிலும் காலையில் இருந்தே பங்குகளின் விலை ஏற்ற இறக்கமாக இருந்தது.

மும்பை பங்குச் சந்தையில் காலையில் வர்த்தகம் தொடங்கியதில் இருந்து இறுதி வரை பங்குகளின் விலைகள் அதிகரிப்பதும், குறைவதுமாக இருந்தது.

அதிகபட்சமாக சென்செக்ஸ் 108.53 புள்ளிகள் அதிகரித்து குறியீட்ட எண் 20,301.05 புள்ளிகளாக உயர்ந்தது. அதே போல் 20,159.73 புள்ளிகளாக குறைந்தது.

இதே போல் நிஃப்டி காலையில் அதிகபட்சமாக 40.10 புள்ளிகள் உயர்ந்து குறியீட்டு எண் 6,110.85 புள்ளிகளாக உயர்ந்தது. இறுதியில் 10.75 புள்ளிகள் உயர்ந்து 6,081.50 புள்ளிகளில் முடிந்தது.

மும்பை பங்குச் சந்தையின் மிட் கேப் 28, சுமால் கேப் 286.25, பி.எ்ஸ.இ.-500 13.52 புள்ளிகள் அதிகரித்தது.
தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி ஜீனியர், சி.என்.எக்ஸ். ஐ.டி, சி.என்.எக்ஸ்.-100, மிட் கேப் ஆகிய பிரிவு குறியீட்டு எண்கள் குறைந்தன. மற்ற பிரிவு குறியீட்டு எண்கள் அதிகரித்தன.
மும்பை பங்குச் சந்தையில் சென்செக்ஸ் பிரிவில் உள்ள பங்குகளில் டாடா ஸ்டீல், பி.ஹெச்.இ.எல், ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, மாருதி, என்.டி.பி.சி, டி.சி.எஸ்., ஹெச்.டி.எப்.சி, ஹின்டால்கோ, விப்ரோ,ஹின்டார்கோ, ஹெச்.டி.எப்.சி. வங்கி ஆகிய பங்குகளின் விலை அதிகரித்தது.

ஏ.சி.சி., அம்புஜா சிமென்ட், பார்தி ஏர்டெல், எல்.அண்ட் டி., சத்யம், எஸ்.பி.ஐ, பஜாஜ் ஆட்டோ, சிப்லா, டி.எல்.எப்., இன்போசியஸ், மகேந்திரா அண்ட் மகேந்திரா, டாடா மோட்டார்ஸ், கிராசிம் ஆகிய நிறுவனங்களின் பங்கு விலை குறைந்தது.

Share this Story:

Follow Webdunia tamil