மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் காலையில் வர்த்தகம் தொடங்கியதில் இருந்தே பங்கு விலைகள் அதிகரித்தன.
காலை 10 மணியளவில் மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 112.18 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 10,966.30 புள்ளிகளாக அதிகரித்தது. இதே போல் தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 34.80 புள்ளிகள் உளர்ந்து குறியீட்டு எண் 6,019.90 புள்ளிகளாக உயர்ந்தது.
மும்பை பங்குச் சந்தையின் மற்ற பிரிவில் உள்ள பங்குகளின் விலையும் அதிகரித்தது. மிட் கேப் 127.39, சுமால் கேப் 200.07, பி.எஸ்.இ-500 86.71 புள்ளிகள் அதிகரித்தன.
தேசிய பங்குச் சந்தையில் தகவல் தொழில் நுட்ப பிரிவு தவிர மற்ற பிரிவுகளின் உள்ள பங்குகளின் விலைகள் அதிகரித்தன.
மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் பிரிவில் உள்ள பங்குகளில் ஏ,சி.சி., அம்புஜா சிமென்ட், கிராசிம், ஹி்ன்டால்கோ, எல்.அண்ட்.டி., ரான்பாக்ஸி, எஸ்.பி.ஐ., டாடா ஸ்டீல், பி.ஹெச்.இ.எல்., சிப்லா, ஹின்டால்கோ, ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, சிப்லா, டாடா மோட்டார்ஸ், டாடா ஸ்டீல், டி.எல்.எப்., மாருதி, மகேந்திரா அண்ட் மகேந்திரா ஆகிய நிறுவனங்களின் பங்கு விலை அதிகரித்து இருந்தது.
பஜாஜ் ஆட்டோ, பார்தி ஏர்டெல், ஹெச்.டி.எப்.சி. வங்கி, சத்யம், இன்போசியஸ், ஹெச்.டி.எப்.சி., ஓ.என்.ஜி.சி., டி.சி.எஸ். ஆகிய நிறுவனங்களின் பங்கு விலை குறைந்து இருந்தது.