Publish Date: Thu, 20 Dec 2007 (19:48 IST)
Updated Date: Thu, 20 Dec 2007 (19:48 IST)
மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 70.61 புள்ளிகள் உயர்ந்து 19,162.57 ஆக அதிகரித்தது. இதேபோல் தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 15.35 புள்ளிகள் உயர்ந்து குறியீட்டு எண் 5,766.50 ஆக உயர்ந்தது.
இன்று காலையில் பங்குச் சந்தையின் வர்த்தகம் தொடங்கியதில் இருந்தே பல்வேறு பிரிவுகளில் உள்ள பங்குகளின் விலைகள் அதிகரிப்பது, குறைவது என்ற போக்கிலேயே இருந்தது.
இன்று சென்செக்ஸ் அதிகபட்சமாக 19,291.14 புள்ளிகளாக உயர்ந்தது. அதேபோல் ஒரு நிலையில் 19,097.70 புள்ளிகளாக குறைந்தது.
தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களின் பிரிவில் இன்போசிஸ் பங்கின் விலை கணிசமாக அதிகரித்தது.
தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள், உலோக உற்பத்தி நிறுவனங்கள், தொழில் நுட்பம், வாகன உற்பத்தி ஆகிய நிறுவனங்களின் பங்கு விலை அதிகரித்தது.
இயந்திர உற்பத்தி, பொதுத்துறை நிறுவனங்கள், நுகர்வோர் பொருட்கள் தயாரிப்பு, பெட்ரோலிய நிறுவனங்கள், வங்கி ஆகியவற்றின் பங்கு விலைகள் குறைந்தன.
மும்பை பங்குச் சந்தையின் மிட் கேப் 54.85, சுமால் கேப் 102.04, பி.எஸ்.இ.-5,006.56 புள்ளிகள் குறைந்தன. மும்பை பங்குச் சந்தையில் சென்செக்ஸ் பிரிவில் உள்ள பங்குகளில் எல்.அண்ட் டி., ரான்பாக்ஸி, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், ஏ.சி.சி., அம்புஜா சிமென்ட், கிராசிம், ஹெச்.டி.எப்.சி. வங்கி, மாருதி, என்.டி.பி.சி,ஐ.டி.சி., சிப்லா ஆகிய நிறுவனங்களின் பங்குகளின் விலை குறைந்தது.
டி.எல்.எப்., ஹின்டார்கோ, ஹிந்துஸ்தான் யூனிலிவர், ஓ.என்.ஜி.சி., டாடா ஸ்டீல், டாடா மோட்டார்ஸ், பஜாஜ் ஆட்டோ, பார்தி ஏர்டெல், இன்போசியஸ், சத்யம், எஸ்.பி.ஐ., இன்போசியஸ், சத்யம், மகேந்திரா அண்ட் மகேந்திரா, ரிலையன்ஸ் எனர்ஜி, ரிலையன்ஸ் இன்டஸ்டிரிஸ் ஆகிய நிறுவனங்களின் பங்கு விலை அதிகரித்தது.
Webdunia
Publish Date: Thu, 20 Dec 2007 (19:48 IST)
Updated Date: Thu, 20 Dec 2007 (19:48 IST)