மும்பை பங்குச் சந்தையிலும், தேசிய பங்குச் சந்தையிலும் இரண்டாவது நாளாக இன்றும் குறியீட்டு எண்கள் குறைந்தன.
மும்பை சென்செக்ஸ் 181.71 புள்ளிகள் குறைந்து குறியீட்டு எண் 19,079.64 ஆக இறங்கியது (நேற்றைய இறுதி நிலவரம் 19,261.35). தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 34.70 புள்ளிகள் குறைந்து குறியீட்டு எண் 5,742.30 புள்ளியாக சரிந்தது. (நேற்றைய இறுதி நிலவரம் 5,777.00).
மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் கடந்த 13ந் தேதி 20,498.11 புள்ளிகள் என்ற அளவுக்கு அதிகரித்தது. இன்று 19,009.35 என்ற அளவுக்கு குறைந்தது. இந்த நிலை தொடருவது அதிக அளவில் பங்குகள் விற்பனை செய்யப்படுவதையே காண்பிக்கிறது என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.
அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் இன்றும் அதிகளவு பங்குகளை விற்பனை செய்தனர். நேற்று ரூ.2,151 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்திருந்தனர்.
இன்று உலோக உற்பத்தி, இயந்திர தயாரிப்பு நிறுவனங்களின் பங்குகளும், வங்கி பங்குகளின் விலை அதிகளவு குறைந்தது.
சென்ற வாரம் சென்செக்ஸ்,நி்ஃப்டி பிரிவில் உள்ள பங்குகளின் விலை குறைந்தாலும், மற்ற பிரிவுகள் பாதிக்கப்படாமல் இருந்தது. ஆனால் நேற்று முதல் எல்லா பிரிவுகளின் குறியீட்டு எண்களும் குறைய தொடங்கியது.
இன்று மும்பை பங்குச் சந்தையி்ன் மிட் கேப் 11.74,சுமால் கேப் 21.90, பி.எஸ்.இ-500 31.28 புள்ளிகள் குறைந்தன.
தேசிய பங்குச் சந்தையில் சி.என்.எக்ஸ் மிட் கேப், நிஃப்டி மிட் கேப் 50 தவிர மற்ற பிரிவுகளின் குறியீட்டு எண்கள் குறைந்தன.
மும்பை பங்குச் சந்தையில் சென்செக்ஸ் பிரிவில் உள்ள பங்குகளில் ரான்பாக்ஸி, டாடா மோட்டார்ஸ், டி.சி.எஸ், ஏ.சி.சி, பஜாஜ் ஆட்டோ, பார்தி ஏர்டெல், ஐ.டி.சி, மாருதி, என்.டி.பி.சி, கிரேசம், சிப்லா, டி.எல்.எப் ஆகிய நிறுவனங்களி்ன் பங்கு விலை அதிகரித்தது.
டாடா ஸ்டீல், எஸ்.பி.ஐ, அம்புஜா சிமென்ட், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், ரிலையன்ஸ் இன்டஸ்டிரிஸ், ரிலையன்ஸ் எனர்ஜி, பி.ஹெச்.இ.எல், ஹெச்.டி.எப்.சி, ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி, எல்.அண்ட்.டி., ஓ.என்.ஜி.சி, சத்யம், விப்ரோ, மகேந்திரா அண்ட் மகேந்திரா, எஸ்.பி.ஐ ஆகிய நிறுவனங்களின் பங்கு விலை குறைந்தது.
கடந்த காலங்களில் அதிக அளவு சென்செக்ஸ் சரிவை சந்தித்த விபரம்.
2006 மே 18ந் தேதி சென்செக்ஸ் 826.38 புள்ளிகள் சரிவு
2007 அக்டோபர் 18ந் தேதி 717.43
2007 நவம்பர் 21ந் தேதி 678.18
2007 டிசம்பர் 17ந் தேதி 769.48