மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 73.56 புள்ளிகளும், தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 10.40 புள்ளிகளும் குறைந்தன.
இன்று காலையில் வர்த்தகம் ஆரம்பித்ததில் இருந்தே இரண்டு பங்குச் சந்தைகளிலும் எல்லா பிரிவில் உள்ள பங்குளின் விலை குறைவதும் அதிகரிப்பதுமாக இருந்தது. ஒரு நிலையில் சென்செக்ஸ் 20 ஆயரத்துக்கும் குறைந்து 19,936.49 ஆக குறைந்தது. அதே நேரத்தில் இதுவரை இல்லாத அளவு மிட் கேப், சுமால் கேப் பிரிவு குறியீட்டு எண்கள் உணவு இடைவேளைக்கு பிறகு அதிகரித்தன.
இன்று அன்றாட உபயோக பொருட்கள், நுகர்வோர் பொருட்கள், மருந்து உற்பத்தியில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களின் பங்கு விலைகள் அதிகரித்தன. இயந்திர உற்பத்தி, தகவல் தொழில் நுட்பம், மின் உற்பத்தி, வங்கிகள் ஆகியவற்றின் பங்கு விலை குறைந்தது.
மும்பை பங்குச் சந்தையில் 2,031 பங்குகளின் விலை அதிகரித்தது. 844 பங்குகளின் விலை குறைந்தது. 27 பங்குகளின் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை.