Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பங்குச் சந்தை‌யி‌ல் ஏற்ற இறக்கம்

பங்குச் சந்தை‌யி‌ல் ஏற்ற இறக்கம்
, புதன், 12 டிசம்பர் 2007 (11:49 IST)
மும்பை தேசிய பங்குச் சந்தையில் காலையில் வர்த்தகம் தொடங்கிய போது சென்செக்ஸ், நிஃப்டி பிரிவுகளில் உள்ள பங்குளின் விலை அதிகளவு குறைந்தது. இதனால் இரண்டு குறியீட்டு எண்களும் சரிவை சந்தித்தன.

நேற்று இரண்டு பங்குச் சந்தைகளிலுமே நல்ல முன்னேற்றம் இருந்தது. இதற்கு நேர் மாறாக இன்று வர்த்தகம் தொடஙக்கிய போதே சரிவை சந்தித்தன.

ஆனால் மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் பிரிவு தவிர மற்ற பிரிவில் உள்ள நிறுவனங்களின் பங்குகளின் விலை குறையவில்லை. இவற்றின் குறியீட்டு எண்களுக்கும் எவ்வித பாதிப்பும் இல்லை. அதிகளவு சரிந்த பங்குகளின் விலைகள் சிறிது உயர ஆரம்பித்தன.

காலை 10.45 மணியளவில் மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 35.92 புள்ளிகள் குறைந்து குறியீட்டு எண் 20,254.97 ஆக இருந்தது. மிட் கேப் 93.54, சுமால் கேப் 151.82, பி.எஸ்.இ-500 26.47 புள்ளிகள் உ.யர்ந்து காணப்பட்டன.

தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 4.40 புள்ளிகள் குறைந்து குறீயீட்டு எண் 6092.85 ஆக இருந்தது. நிஃப்டி ஜூனியர். சி.என்.எக்ஸ் 100, சி.என்.எக்ஸ் 500, மிட் கேப், மிட் கேப் 50 ஆகியவைகளின் குறியீட்டு எண்கள் அதிகரித்து இருந்தன. மற்றவை குறைந்து இருந்தது.

சென்செக்ஸ் பிரிவில் உள்ள பங்குகளில் ஏ.சி.சி., சிப்லா, டி.எல்.எப்., ஹூன்டால்கோ, மாருதி, மகேந்திரா அண்ட் மகேந்திரா, ரிலையன்ஸ் இன்டஸ்டிரிஸ், டி.சி.எஸ்., ஹெச்.டி.எப்.சி., ஓ.என்.ஜி.சி., ரான்பாக்ஸி, டாடா மோட்டார்ஸ், டாடா ஸ்டீல்,ரான்பாக்ஸி ஆகிய நிறுவனங்களின் பங்கு விலை உ.யர்ந்தது.

அம்புஜா சிமென்ட், பி.ஹெச்.இ.எல்., ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, எல்.அண்ட்.டி., என்.டி.பி.சி., ரிலையன்ஸ் எனர்ஜி, விப்ரோ, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், பார்தி ஏர்டெல், கிரேசம், ஹெச்.டி.எப்.சி. வங்கி, ஐ.டி.சி.,சத்யம், எஸ்.பி.ஐ., பஜாஜ் ஆட்டோ, ஹிந்துஸ்தான் யூனிலிவர் ஆகிய நிறுவனங்களின் பங்கு விலை குறைந்தது.

இன்று உணவு இடைவேளைக்கு‌ப் பிறகு நிலைமை மாறலாம் என்ற கருத்து பங்குச் சந்தை வட்டாரங்களில் நிலவுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil