Publish Date: Thu, 06 Dec 2007 (18:58 IST)
Updated Date: Thu, 06 Dec 2007 (18:57 IST)
மும்பை தங்கம் வெள்ளி சந்தையில் இன்று பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.125-ம், 24 காரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.165 குறைந்தது.
நகை உற்பத்தியாளர்கள் தங்கம் வாங்குவதில் ஆர்வம் காண்பிக்கவில்லை. இதே போல் தொழில் துறையினரும் வெள்ளியை வாங்காத காரணத்தினால் விலை குறைந்ததாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
காலையிலேயே பார் வெள்ளி கிலோ ரூ.18,980 என்ற அளவில் விற்பனை துவங்கியது. பிறகு சிறிது விலை அதிகரித்து இறுதியில் ரூ.18,955 என்ற அளவில் முடிந்தது. இது நேற்றைய இறுதி விலையை விட 125 குறைவு.
இதே போல் நியூயார்க், லண்டன் உட்பட அந்நிய நாட்டு சந்தைகளிலும் வெள்ளி விலை குறைந்தது. இன்று 1 டாலர் ரூ.14.20/14.22 என்ற அளவில் விற்பனையானது. நேற்றைய விலை 14.35/14.37 டாலர்.இங்கு தங்கத்தின் விலையும் குறைந்தது. 1 அவுன்ஸ் தங்கம் 791.25/793.50 டாலர் என்ற அளவில் விற்பனையானது. நேற்றைய விலை 803.25/805.50 டாலர்.
Webdunia
Publish Date: Thu, 06 Dec 2007 (18:58 IST)
Updated Date: Thu, 06 Dec 2007 (18:57 IST)