மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் நேற்று போலவே இன்றும் பங்குகளின் விலை அதிகரித்து, குறியீட்டு எண்களும் உயர்ந்தன.
பங்குச் சந்தைகளில் இன்று வர்த்தகம் தொடங்கிய போது சென்செக்ஸ் 194.33 புள்ளிகளும், நிஃப்டி 54.35 புள்ளிகளும் அதிகரித்து இருந்தது.
பங்குகளின் விலைகளில் சிறிய அளவில் மாற்றம் இருந்தது. மும்பை பங்குச் சந்தையில் காலை 10.30 மணியளவில் சென்சக்ஸ் 226.82 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 19,964.89 ஐ தொட்டது. இதேபோல் மற்ற பிரிவு பங்குகளின் விலைகளும் அதிகரித்தன. மிட் கேப் 133.27, சுமால் கேப் 227.13 பி.எஸ்.இ-500 102.44 புள்ளிகள் அதிகரித்தது.
இதே போல் தேசிய பங்குச் சந்தையில் எல்லா பிரிவு பங்குகளின் விலை அதிகரித்தது. நிஃப்டி 68.40 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 6008.40 ஆக உயர்ந்தது.
மும்பை பங்குச் சந்தையில் சென்செக்ஸ் பிரிவில் உள்ள பங்குகளில் ஏ.சி.சி, பஜாஜ் ஆட்டோ, டி.எல்.எப், கிரேசம், ஹின்டால்கோ, விப்ரோ, டாடா மோட்டார்ஸ் ஆகிய நிறுவனங்களின் பங்கு விலை குறைந்தது.
எல்.அண்ட்.டி, மகேந்திரா அண்ட் மகேந்திரா, மாருதி, ரிலையன்ஸ் எனர்ஜி, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், ரிலையன்ஸ் இன்டஸ்டிரிஸ், அம்புஜா சிமென்ட், பி.ஜெச்.இ.எல், ஹெச்.டி.எப்.சி, ஹெச்.டி.எப்.சி வங்கி, இன்போசியஸ், ஐ.டி.சி, என்.டி.பி.சி, ஓ.என்.ஜி.சி, எஸ்.பி.ஐ, டாடா ஸ்டீல், சிப்லா ஆகிய நிறுவனங்களின் பங்கு விலைகள் அதிகரித்தன.
இன்று அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் பங்குகளில் அதிகளவு முதலீடு செய்தன. இன்று வர்த்தகம் தொடங்கிய முதல் ஐந்து நிமிடத்தில் தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 6 ஆயிரம் புள்ளிகளை தாண்டி 6,027.05 புள்ளிகளாக உயர்ந்தது. இதே போல் மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 20 ஆயிரம் புள்ளிகளை தாண்டி 20,064.31 ஆக உயர்ந்தது.