மும்பை பங்குச் சந்தையிலும், தேசிய பங்கு சந்தையிலும் நேற்று இருந்த நிலைமை இன்று மாறியது. இன்று காலையில் வர்த்தகம் தொடங்கியதில் இருந்தே குறியீட்டு எண்கள் அதிகரித்தன.
மும்பை பங்குச் சந்தையில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போதே சென்செக்ஸ் 74 புள்ளிகள் அதிகரித்தது. தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 36.30 புள்ளிகள் உயர்ந்தது.
மும்பை பங்குச் சந்தையில் காலை 10.30 மணியளவில் சென்செக்ஸ் 180.17 புள்ளிகள் அதிகரித்து குறியீயட்டு எண் 19,709.67 புள்ளிகளாக உயர்ந்தது. இதே போ்ல மிட் கேப் 141.60, சுமால்கேப் 238.69, பி.எஸ்.இ-500 91.22 புள்ளிகள் அதிகரித்தன.
நேற்று சென்செக்ஸ் குறியீட்டு எண் குறைந்தாலும் இந்த குறியீட்டு எண்கள் குறையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 53.90 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 5912.25 புள்ளிகளாக உயர்ந்தது. தேசிய பங்குச் சந்தையில் தகவல் தொழில் பிரிவு குறியீட்டு எண் மட்டும் குறைந்து காணப்பட்டது. மற்ற பிரிவுகள் உயர்ந்து இருந்தன.
இன்று மும்பை பங்குச் சந்தையில் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி, லார்சன் அண்ட் டூப்ரோ, மாருதி, என்.டி.பி.சி, மக்ந்திரா அண்ட் மகேந்திரா, ஓ.என்.ஜி.சி, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், ரிலையன்ஸ் இன்டஸ்டிரிஸ், ஸ்டேட் பாங்க், ரான்பாக்ஸி, ஏ.சி.சி, அமபுஜா சிமென்ட், பஜாஜ் ஆட்டோ, சிப்லா, ஹெச்.டி.எப்.சி வங்கி, ஹெச்.டி.எப்.சி, டாடா மோட்டார்ஸ் ஆகிய நிறுவனங்களின் பங்கு விலை அதிகரித்து இருந்தது.
ரிலையன்ஸ் எனர்ஜி, சத்யம், டாடா ஸ்டீல், விப்ரோ, பார்தி ஏர்டெல், கிரேசம், ஹெச்.டி.எப்.சி, ஹிந்துஸ்தான் யூனிலிவர், ஐ.டி.சி ஆகிய நிறுவனங்களின் பங்கு விலைகள் குறைந்து இருந்தன.