மழை, பனியால் சாம்பார் வெங்காயம் விளைச்சல் குறைவாக இருப்பதால் அதன் விலை கடுமையாக உயர்ந்துள்ளது என்று காய் கறி கள் வியாபாரிகள் சங்கத் தலைவர் செளந்திரராஜன் கூறினார்.
தமிழகத்தில் தற்போது மழை பெய்து வருவதால் வெங்காய விளைச்சல் அதிகமாக உள்ள திண்டுக்கல், சேலம், குற்றாலம் ஆகிய இடங்களில் இருந்து அதன் வரத்து மிகவும் குறைந்துள்ளது. குறிப்பாக பனி அதிகமாக காணப்படுவதால் சாம்பார் வெங்காய உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஒரு நாளை குறைந்தது 100 மூட்டைகள் இருந்து 150 மூட்டைகள் வரும். தற்போது 50 மூட்டைகள் முதல் 70 மூட்டைகள் வரைதான் சின்ன வெங்காயம் மார்க்கெட்டுக்கு வருகிறது. அதனால்தான் விலை உயர்ந்துள்ளது என்று காய் கறிகள் வியாபாரிகள் சங்கத் தலைவர் செளந்தரராஜன் கூறினார்.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கிலோ ரூ.22க்கு விற்ற சாம்பார் வெங்காயம் தற்போது ஏட்டு ரூபாய் உயர்ந்து ரூ.30க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் விற்கப்படும் காய்கறி விலைகள் (ஒரு கிலோ) வருமாறு:
நாசிக் வெங்காயம் ரூ.15
பெரிய வெங்காயம் ரூ.10,12
சாம்பார் வெங்காயம் ரூ.30
கத்தரிக்காய் ரூ.05, 6
வெண்டைக்காய் ரூ.13
பீன்ஸ் ரூ.07, 8
புடலங்காய் ரூ.08
ஊட்டி கேரட் ரூ.08
பெங்களூர் கேரட் ரூ.10
நாட்டு தக்காளி ரூ.14
பெங்களூர் தக்காளி ரூ.15
உருளைக்கிழங்கு ரூ.14
சேனைக் கிழங்கு ரூ.07
கோஸ் ரூ.03
மொச்சை பயிர் ரூ.18
பாகற்காய் ரூ.13
முள்ளங்கி ரூ.05
பீட்ரூட் ரூ.12
அவரைக்காய் ரூ.10
கோவக்காய் ரூ.10
கொத்தவரைக்காய் ரூ.10, 12
சுரக்காய் ரூ.06
பார்கர்காய் ரூ.15
மிளகாய் ரூ.09
கொட மிளகாய் ரூ.25
இஞ்சி ரூ.25
சோம்பு ரூ.09
காராமணி ரூ.20
முருங்கக்காய் ரூ.20
வெள்ளரிக்காய் ரூ.05
பீர்க்கன் காய் ரூ.08
பூசணி ரூ.03
சவ்சவ் ரூ.08
நுனுகோல் ரூ.08
பரங்கிகாய் ரூ.03
பட்டாணி ரூ.30
பழ வகைகள் (ஒரு கிலோ)
ஆப்பிள் ரூ.60-80
பைன் ஆப்பிள் ரூ.18-20
ஆரஞ்சு ரூ.25-30
சாத்துக்குடி ரூ.25-30
கொய்யா ரூ.12
க.திராட்சை கொட்டையுடன் ரூ.25-28
க.திராட்சை கொட்டை இல்லாமல்ரூ.50
ப.திராட்சை கொட்டையுடன் ரூ.30
ப.திராட்சை கொட்டை இல்லாமல்ரூ.40-45
மாதுளை ரூ.30-35
வாழைப்பழம் ரூ.12-13
செவ்வாழைப்பழம் ரூ.32
சீத்தா ரூ.20
பப்பாளி ரூ.07
சப்போட்டா ரூ.08
கிரினி பழம் ரூ.21
தர்பூசணி ரூ.10-13