மும்பை தங்கம் வெள்ளி சந்தையில் பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.250-ம், 24 காரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.135-ம் குறைந்தது.
இன்று சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை சிறிது அதிகரித்தது. அதே நேரத்தில் 1 அவுன்ஸ் தங்கத்தின் விலை 800 டாலருக்கும் குறைவாக இருந்தது.
இன்று நியூயார்க் சந்தையில் 1 அவுன்ஸ் தங்கம் 796.10/796.90 டாலராக விற்பனையானது. (நேற்றைய இறுதி விலை 795.00/795.80).
வெள்ளியின் விலை 4 சென்ட் குறைந்தது. வெள்ளியின் விலை 1 அவுன்ஸ் 14.19/14.24 டாலர். (நேற்றைய இறுதி விலை 14.23/14.28).
இன்றைய விலை நிலவரம்:
24 காரட் தங்கம் 10 கிராம் ரூ.10,305
22 காரட் தங்கம் 10 கிராம் ரூ.10,255
பார் வெள்ளி 1 கிலோ ரூ.19,180