Publish Date: Fri, 30 Nov 2007 (11:59 IST)
Updated Date: Fri, 30 Nov 2007 (11:59 IST)
மும்பை பங்குச் சந்தையிலும், தேசிய பங்குச் சந்தையிலும் பங்குகளின் விலை அதிகரித்தன.
மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகம் தொடங்கியவுடன் சென்செக்ஸ் 173.06 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 19,177.32 ஆக உயர்ந்தது. தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 70.85 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 5,705.45 ஆக உயர்ந்தது. சிறிது பின்னடைவு அடைந்ததற்கு பிறகு தொடர்ந்து எல்லா பிரிவு பங்குகளின் விலைகளும் அதிகரித்த வண்ணம் இருந்தது.
காலை 11.30 மணியளவில் மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 218.28 புள்ளிகள் உயர்ந்து குறியீட்டு எண் 19,222.04 ஆக இருந்தது. இதே போல் மிட் கேப் 134.97: சுமால் கேப் 89.87: பி.எஸ்.இ-500 108.54 புள்ளிகள் உயர்ந்தன.
இதே போக்கு தேசிய பங்கு சந்தையிலும் காணப்பட்டது.
சென்செக்ஸ் பிரிவில் உள்ள பங்குகளில் ஏ.சி.சி, பார்தி ஏர்டெல், கிரேசம், ஹின்டால்கோ, இன்போசியஸ், எல்.அண்ட்.டி, சிப்லா, ஹெச்.டி.எப்.சி, ஐ.டி.சி, மாருதி, மகேந்திரா அண்ட் மகேந்திரா, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், ரிலையன்ஸ் இன்டஸ்டிரிஸ், ரிலையன்ஸ் எனர்ஜி, என்.டி.பி.சி, ரான்பாக்ஸி, எஸ்.பி.ஐ, விப்ரோ, சிப்லா, ஹெச்.டி.எப்.சி வங்கி, டாடா மோட்டார்ஸ், டாடா ஸ்டீல், டி.எல்.எப் ஆகிய நிறுவனங்களின் பங்கு விலை அதிகரித்து இருந்தது.
அம்புஜா சிமென்ட், பி.ஹெச்.இ.எல், பஜாஜ் ஆட்டோ ஹிந்துஸ்தான் யூனிலிவர் ஆகிய நிறுவனங்களின் பங்கு விலை குறைந்து காணப்பட்டன.
Webdunia
Publish Date: Fri, 30 Nov 2007 (11:59 IST)
Updated Date: Fri, 30 Nov 2007 (11:59 IST)