Publish Date: Thu, 29 Nov 2007 (19:53 IST)
Updated Date: Thu, 29 Nov 2007 (19:53 IST)
மும்பை பங்குச் சந்தையில் இன்று மாலையில் நேற்றைய இறுதி நிலவரத்தை விட சென்செக்ஸ் 64.39 புள்ளிகள் கூடுதலாக முடிந்தது.
இதே போல் தேசிய பங்குச் சந்தையில் 17.05 புள்ளிகள் கூடுதலாக முடிவடைந்தது.
காலையில் வர்த்தகம் தொடங்கிய போது மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 352 புள்ளிகளும், தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 94 புள்ளிகள் அதிகமாகவும் வர்த்தகம் தொடங்கியது. மதியம் சுமார் 2.45 மணி வரை பங்குச் சந்தையில் பங்குகள் விலை அதிகரிப்பதும், குறைவதுமாக இருந்தது.
ஆனால் அதற்கு பின் குறையத் தொடங்கின. இதனால் குறியீட்டு எண்களும் சரிந்தன. இறுதியில் வர்த்தகம் முடியும் போது சென்செக்ஸ் 64.39 புள்ளிகள் உயர்வுடன் முடிந்தது. சுமால் கேப் 14.46, பி.எஸ்.இ-500 11.62 புள்ளிகள் அதிகரித்தது. ஆனால் மிட் கேப் 20.04 புள்ளிகள் குறைந்தன.
சென்செக்ஸ் பிரிவில் உள்ள பங்குகளில் என்.டி.பி.சி, ரிலையன்ஸ் இன்டஸ்டிரிஸ், சத்யம், எஸ்.பி.ஐ, விப்ரோ, அம்புடா சிமென்ட், பார்தி ஏர்டெல், டி.எஸ்.எப், ஹெச்.டி.எப்.சி வங்கி, ஹிந்துஸ்தான் யூனிலிவர், டாடா மோட்டார்ஸ், இன்போசியஸ்,சத்யம், டி.சி.எஸ், மாருதி, மகேந்திரா அண்ட் மகேந்திரா ஆகிய நிறுவனங்களின் பங்கு விலை அதிகரித்தது.
ஏ.சி.சி, பஜாஜ் ஆட்டோ, பி.ஹெச்.இ.எல், கிரேசம், ஹெச்.டி.எப்.சி, ஹின்டால்கோ, ஐ.டி.சி, எல்.அண்ட்.டி,ஓ.என்.ஜி.சி, ரிலையன்ஸ் எனர்ஜி, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், சிப்லா, ரான்பாக்ஸி ஆகிய நிறுவனங்களின் பங்கு விலை குறைந்தது.
Webdunia
Publish Date: Thu, 29 Nov 2007 (19:53 IST)
Updated Date: Thu, 29 Nov 2007 (19:53 IST)