மும்பை பங்குச் சந்தையிலும், தேசிய பங்குச் சந்தையிலும் இன்று காலை வர்த்தகம் தொடஙகிய போதே குறியீட்டு எண்கள் அதிகரித்தன.
மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 352.85 புள்ளிகளும், தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 94 புள்ளிகளும் அதிகரித்தது.
அமெரிக்காவின் ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை குறைக்கும் என்ற எதிர்பார்ப்பில் மற்ற ஆசிய நாட்டு பங்குச் சந்தைகளிலும், பங்குகளை வாங்கும் போக்கு தென்பட்டது. இதனால் மற்ற நாடுகளின் பங்குச் சந்தை குறியீட்டு எண்களும் அதிகரித்தன.
மும்பை பங்குச் சந்தையில் காலை 11 மணியளவில் சென்செக்ஸ் பிரிவில் உள்ள எல்லா பங்குவிலைகளும் அதிகரித்தன. சென்செக்ஸ் 226.96 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 19,165.63 புள்ளிகளாக இருந்தது.
இதே போல் மிட் கேப் பிரிவு 33.59 புள்ளி, சுமால் கேப் 61.31 புள்ளி, பி.எஸ்.இ-500 70.24 புள்ளி அதிகரித்து இருந்தது.
தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 57.90 புள்ளி அதிகரித்து குறியீட்டு எண் 5675.45 புள்ளிகளாக இருந்தது.
இரண்டு பங்குச் சந்தைகளிலும் நேற்று காலையில் குறியீட்டு எண்கள் உயர்ந்து, மதியத்திற்கு பிறகு பங்குகளின் விலைகள் சரிந்தது என்பது கவனிக்கத்தக்கது.