மும்பை தங்கம் வெள்ளி சந்தையில் இன்று பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.455-ம், 24 காரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.255-ம் குறைந்தது.
சர்வதேச சந்தையில் தங்கம், வெள்ளியின் விலை குறைந்து, நகை உற்பத்தியாளர்கள் தங்கம் வாங்குவதில் ஆர்வம் காட்டாது ஆகிய காரணங்களினால் விலை குறைந்ததாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
லண்டன், நியூயார்க் சந்தைகளில் தங்கத்தின் விலை குறைந்தது. இங்கு 1 அவுன்ஸ் தங்கத்தின் விலை 813.50/815.25 டாலராக விற்பனாயானது. (நேற்றைய விலை 820.25/823.50).
இதே போல் வெள்ளியின் விலையும் குறைந்தது. இங்கு 1 அவுன்ஸ் வெள்ளி 14.47/14.53 டாலருக்கு விற்பனையானது.(நேற்றைய விலை 14.75/14.78).