மும்பை தங்கம் வெள்ளி சந்தையில், இன்று மாலையில் பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.105-ம், 24 காரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.70-ம் குறைந்தது.
காலையில் வெள்ளியின் விலை கிலோ ரூ.19,690 என்ற அளவில் வர்த்தகம் தொடங்கியது. இன்று தொழில் துறையினர் குறைந்த அளவே வெள்ளியை வாங்கினார்கள். அந்நிய நாடுகளில் இருந்து வந்த தகவல்களினாலும், உள்நாட்டில் குறைந்த அளவே வாங்குவதில் ஆர்வம் காட்டியதால் இறுதியில் பார் வெள்ளியின் விலை நேற்றைய விலையை ஒப்பிடும் போது கிலோவுக்கு ரூ.105 குறைந்தது.
இன்றைய இறுதி விலை நிலவரம்:
24 காரட் தங்கம் 10 கிராம் ரூ.10,675 (நேற்று ரூ. 10,745)
22 காரட் தங்கம் 10 கிராம் ரூ.10,625 (10,695)
பார் வெள்ளி 1 கிலோ ரூ.19,660 (19,765 )