வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலவாணி சந்தையில் இன்று டாலரின் மதிப்பு 4 பைசா அதிகரித்தது. இன்று காலை 1 டாலர் 39.43/ 39.45 என்ற அளவில் விற்பனை தொடங்கியது.
பிறகு 1 டாலர் ரூ.39.40 முதல் ரூ.39.45 வரை விற்பனையானது.
ஆசிய பங்குச் சந்தைகளில் பங்குளின் விலை குறைந்து வருகிறது. இந்திய பங்குச் சந்தையி்ல் இருந்து அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் பங்குகளை விற்பனை செய்து, முதலீடுகளை அந்நிய நாடுகளுக்கு கொண்டு செல்வதால் டாலரின் தேவை அதிகரித்து உள்ளது. இதுவே டாலர் மதிப்பு அதிகரிப்பதற்கு காரணம் என்று வர்த்தகர்கள் கூறினார்கள்.