Newsworld Finance Market 0711 21 1071121016_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மும்பை பங்குச் சந்தை வீழ்ச்சி

Advertiesment
மும்பை பங்குச் சந்தை வீழ்ச்சி

Webdunia

, புதன், 21 நவம்பர் 2007 (12:11 IST)
மும்பை பங்குச் சந்தையில் இன்றும் தொடர்ந்து சென்செக்ஸ் குறியீட்டு எண் சரிந்தது. இதே போல் தேசிய பங்குச் சந்தையின் நிப்டியும் குறைந்தது.

மும்பை பங்குச் சந்தையில் காலையில் வர்த்தகம் தொடங்கிய போதே, நேற்றைய இறுதி நிலவரத்தை விட சென்செக்ஸ் 181.44 புள்ளி குறைந்தது. இதே போல் தேசிய பங்குச் சந்தையின் நிப்டியும் 45 புள்ளிகள் குறைந்தது.

இரண்டு பங்குச் சந்தைகளிலும் தொடர்ந்து எல்லா பிரிவு பங்குகளின் விலையும் குறைந்து வருகின்றன. காலை 11.30 மணியளவில் நேற்றைய இறுதி நிலவரத்தை விட சென்செக்ஸ் 349.91 புள்ளிகள் குறைந்தது. சென்செக்ஸ் குறியீட்டு எண் 18,930.89 புள்ளிகளாக இருந்தது.
கடந்த இரண்டு நாட்களாக சென்செக்ஸ் புள்ளிகள் குறைந்தாலும், மற்ற பிரிவு பாதிக்கப்படவில்லை. ஆனால் இன்று மற்ற பிரிவு குறியீட்டு எண்களும் குறைந்தன. மிட்கேப் 175.69 புள்ளிகளும், சுமால் கேப் 136.16 புள்ளிகளும், பி.எஸ்.இ-500 151.51 புள்ளிகளும் குறைந்தன.

தேசிய பங்குச் சந்தையின் நிப்டி 64.30 புள்ளிகள் குறைந்து குறியீட்டு எண் 5716.60 புள்ளிகளாக இருந்தது. தேசிய பங்குச் சந்தையில் நிப்டி ஜூனியர், சி.என்.எக்ஸ் மிட் கேப், நிப்டி மிட் கேப்50 பிரிவுகள் தவிர மற்ற பிரிவு குறியீட்டு எண்கள் குறைந்தன.

மும்பை பங்குச் சந்தையில் சென்செக்ஸ் பிரிவில் உள்ள பங்குகளில் ஏ.சி.சி. அம்புஜா சிமென்ட், ஹெச்.டி.எப்.சி, ஹெச்.டி.எப்.சி வங்கி, சிப்லா, மகேந்திரா அண்ட் மகேந்திரா, ரீலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், ரிலையன்ஸ் இன்டஸ்டிரிஸ், ரிலையன்ஸ் எனர்ஜி, பஜாஜ் ஆட்டோ, கிரேசம், ஹின்டால்கோ, ஐ.டி.சி, இன்போசியஸ், மாருதி, எல்.அண்ட்.டி, சத்யம், டாடா ஸ்டீல், டாடா மோட்டார்ஸ், பி.ஹெச்.இ.எல், டி.எல்.எப், ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி, என்.டி.பி.சி, ரான்பாக்ஸி, டி.சி.எஸ், ஹிந்துஸ்தான் யூனிலிவர், ஒ.என்.ஜி.சி, எஸ்.பி.ஐ விப்ரோ, பார்தி ஏர்டெல் ஆகிய 30 நிறுவனங்களின் பங்கு விலைகளும் குறைந்தன.

Share this Story:

Follow Webdunia tamil